பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

55


இடைவிடாது சேவை செய்து வரும் முக்கிய பிரசாரகர்களுக்கு மகாத்மாஜி தம்முடைய கையாலேயே நீலக் கதர்ச் சால்வைகளை வழங்கினார். பின்னர், சுமார் நாற்பத்தைந்து நிமிட நேரம் ஹிந்துஸ்தானி பாஷையின் அவசியத்தைப் பற்றிப் பேசினார்.

"மனிதனுக்குப் பிராணவாயு எவ்வளவு அத்தியாவசியமோ, அதைப்போல இந்திய மக்களுக்கு ஹிந்துஸ்தானி பாஷையும் அவசியமாகும். ஹிந்துஸ்தானி கற்பதை ஒரு முக்கிய தர்மமாகக் கருத வேண்டும். ஹிந்துஸ்தானி மிகவும் சுலபமான பாஷை. புத்திசாலிகளான தென்னிந்தியர்களுக்கு ஹிந்தி கற்பது ஒரு பிரமாதமான காரியமல்ல" என்றார். காந்திஜி இப்படிக் கூறியதும் சபையில் உட்கார்ந்து கொண்டிருந்த நான் என்னை நானே ஒரு தடவை பெருமிதத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டேன். காரணம், ஒரு தென்னிந்தியன் ஆனபடியால் மகாத்மாஜி கூறியது எனக்கும் பொருந்துமல்லவா?

வெள்ளி விழாவுக்கு அடுத்தபடியாக நடந்த வைபவங்களில் முக்கியமாகப் பட்டமளிப்பு விழாவைத்தான் குறிப்பிட வேண்டும். அன்றைய விழாவுக்குத் தமிழ், கேரளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நாலு பாஷைப் பிராந்தியங்களிலிருந்து 'விசாரத்' பரீட்சையில் தேறியவர்களெல்லாம் பட்டம் பெறுவதற்காகப் பந்தலில் பிரசன்னமாயிருந்தார்கள். இவர்களில் பாதிபேருக்கு மேல் பெண்மணிகளாகவே காணப்பட்டனர்.

விழா ஆரம்பமாவதற்கு ஐந்து நிமிஷம் முன்னதாக, காந்திஜி, ராஜாஜி இன்னும் பட்டமளிப்பு விழாவில்