பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மதுரையில் மகாத்மா

பிப்ரவரி முதல் தேதி வெள்ளிக்கிழமை இரவு 'ஸ்பெஷல்' ரயில் எழும்பூர் ஸ்டேஷனை விட்டுப் புறப்படுமுன் அது 'ஸ்பெஷல்' ரயில்தானா என்பதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு எஞ்சின் பக்கம் போனேன்.

என்னைப் பார்த்து, "யார் நீ?" என்று கேட்டார் ஒரு ரயில்வே அதிகாரி.

"நான் யார் என்பது மிக்க ரகசியம்; நான் மகாத்மாஜியுடன் அவருடைய 'ஸ்பெஷல்' ரயிலில் போகப்போகிறேன் என்பதும் மிக மிக ரகசியம்; ஆகையால், இந்த ரயில் எங்கே போகிறது என்பதை மட்டும் சொல்ல வேணும்" என்று கேட்டுக் கொண்டேன்.

ரயில்வே அதிகாரியும் பதிலுக்கு, "இந்த ரயில் மகாத்மா காந்திக்காகப் போகும் 'ஸ்பெஷல்' என்பது ரொம்ப ரகசியம். இது பத்து மணிக்குப் புறப்படப் போகிறது என்பது அதைவிடப் பரம ரகசியம். ஆகையால், நான் இந்த ரகசியங்களையெல்லாம் உமக்குச் சொல்ல முடியாது" என்றார்!

எனவே, அந்த ரகசிய வண்டியில் நான் யாருக்கும் தெரியாமல் ஏறி, 'கப் சிப்' என்று ஒரு மூலையில் போய்