பக்கம்:நவக்கிரகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரியன் 3

"நாங்கள் இருளுக்கு அப்பால் உயரிய ஒளியைப் பார்ப்பவர்களாய், சூரியனிடம் வந்துள்ளோம். அவன் தேவர்களின் தேவனுவான். அவன் உயரிய சோதியாவான்.'

'சூரியனுக்குச் சமானமான சோதியுள்ளவன் யார்?" 'அவனுடைய குதிரைகள் ஒரு சமயம் ஒளியும் மற்ருெரு சமயம் இருளுமான ஆற்றலைத் தாங்கியுள்ளன.'

"குரியனே! நீ மகான், ஆதித்தியனே! நீ பெரியவன்; நீ பெரியவனுக இருப்பதால் நின் பெருமை போற்றப் பெறுகின்றது.' இவ்வாறு செங்கதிரோன் பெருமையை யஜுர்வேதம் பேசுகிறது.

சாம வேதத்தில் வரும் சூரியனைப்பற்றிய மந்திரங்களில் சிலவற்றின் கருத்து வருமாறு:

ஆதித்தியர்களே! நோயை நீக்குக. இன்னல் புரியும் பகைவரை ஒட்டுக! கெடுமதி உடையவனேயும் அழிப் பீர்களாக! எங்களைத் தீவினையினின்றும் நீக்குக!”

"ஆயிர மக்களால் காணப்படுபவன். கவிகளுக்கு அறிவாக நிற்பவன், சோதி வடிவினன் சூரியன், இவன் இருளே நீக்கி ஒளி உதயத்தைப் புகுத்துகிருன். சந்திர ைேடு ஒன்றுகிருன்.'

'சூரியன் வாயுவினல் தாண்டப் பெற்று, மக்களைப் பாதுகாக்கிருன்; வளம் தருகிருன்: பல வகையில் ஒளி செய்கிருன். இயங்குவனவும் நிற்பனவுமாகிய அனைத் திற்கும் ஆன்மாவான சூரியன், வானத் தையும் வையத்தையும் தன் ஒளியால் கிரப்புகிருன். எல்லாவற்றையும் விளக் கும் சூரியனுக்கு முன், திருடர்களைப்போல் தம் கதிர்களே அடக்கிக்கொண்டு, நட்சத் திரங்கள் மறைந்துவிடுகின்றன.'

குரியனே! நீ நோய்களைப் போக்கு பவன். எல்லா ஒளி உலகத்தையும் ஒளிரச் செய்து, எழில் கனிந்த பொருள் அனேத் தையும் விளக்கம் அடையச் செய்கிருய். அமரரும் ஞானியரும் மக்களும் எங்கும் பரவும் சோதியைக் காணும் வண்ணம் நீ - உதயமாகிருய். சூரியனே! * உன் ஹரிச்சந்திரபுரத்தில் உள்ள ஆற்றலால் எங்கள் வாழ்காளே இன்ப சூரியன் - உற்சவ விக்கிரகம் முடைய தாக்கி, உயிர்க்கூட்டங் -

1. யஜுர்வேதம்: எம். ஆர். ஜம்புநாதன் மொழிபெயர்ப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/10&oldid=1006444" இலிருந்து மீள்விக்கப்பட்டது