பக்கம்:நவக்கிரகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரன் 21

தெய்வங்களைப் பாடும் இசைப் பாட்டுக்களுக்குத் தேவ்பாணி என்று பெயர். சந்திரனேயும் தேவபாணியால் பாடுவார்கள்.

'நலம்பெறு கொள்கை,

வானூர் மதியமும் பாடி' என்று சிலப்பதிகாரத்தில் இந்தப் பாட்டைப்பற்றிய செய்தி வருகிறது. அங்கே உரையாசிரியர் சந்திரனேப் பாடிய தேவபாணிக்கு ஒர் உதாரணம் காட்டுகிரு.ர்.

'குரைகடல் மதிக்கும் மதலையைக் குறுமுயல் ஒளிக்கும் அரணினை

இரவிருள் அகற்றும் நிலவினை இறையவன் முடித்த அணியினை

கரியவன் மனத்தின் உதிதனை கயிரவம் மலர்த்தும் மகினனை

பரவுநர் தமக்கு நினதிரு பதமலர் தபுக்க வினையையே."

'ஒலிக்கின்ற பாற்கடலேக் கடையும்போது துணுக கின்ருய். குறிய முயல் ஒளிக்கின்ற பாதுகாப்பிடமாக இருக்கிருய். இரவில் இருளே அகற்றும் நிலவை உடையாய். திருமாலின் மனத்தே உதித்தவன் .ே குமுத மலரை மலர்த்தும் நாயகனாக உள்ளாய். கின் இரு பாத மலர்களே யும் துதிப்பவர்களுக்கு அவை பாவங்களை நீக்குவன வாகுக!' என்பது இதன் பொருள்.

காப்பியக் கவிஞர்கள் சந்திரனுடைய உதயத்தையும் மறைவையும் அழகாகப் பாடியிருக்கிருர்கள். சந்திரன் காதல் தெய்வம் என்று பாரதியார் சொல்கிருர் ஸோமதேவன் புகழ்' என்று ஒரு பாட்டை அவர் பாடியிருக்கிரு.ர்.

"ஜய ஸோம ஜய ஸோம ஜய ஸோம தேவா!' என்று தொடங்குவது அந்தப் பாடல், வியனுலகில் ஆனந்த விண்ணிலவு பெய்தாய்' என்றும், மயல் கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்' என்றும் பாடுகிருர், நிலாவைக் கண்டு, உலகமே இன்பக் கொந்தளிப்பை அடைகிறது. கவிஞர்கள் பால் கவிவெறி மூள்கிறது.

G

ஒவியத்தில் சதுரமான பீடத்தின்மேல் அமைந்த ஆசனத்தில் சந்திரமூர்த்தி வீற்றிருக்கிருன். அந்தப் பீடம் உள்ள தேர், இரண்டு சக்கரங்களும் பத்துக் குதிரைகளும் உடையதாக இருக்கிறது. கையிலே வெள்ளே அல்லியை எந்தி, உடம்பெல்லாம் அணிகள் அணிந்து, பன்னிற மாலை வேய்ந்து, முடி புனைந்து விளங்குகிருன் மதிக்கடவுள். தண்மையும் மென்மையும் அமைதியும் உருவாக விளங்கும் அவனுடைய திருமுக மண்டலத்துக்குப் பின் ஒளி வட்டம் ஒளிர்கிறது. வெண்குடை, இடத்தே ஓங்கி நிற்க, அதன் மேல் சிங்கக் கொடி பறக்கிறது. கர்க்கடக ராசிக்கு உடையவன் இவன் என்பதை அருகில் உள்ள கண்டு குறிக்கிறது.

சந்திரனை அடுத்து ரோகிணி இருக்கிருள். அவளருகே உள்ள கட் சத்திரம் அவள் நட்சத்திர மங்கை என்று காட்டுகிறது. சந்திரனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/28&oldid=584242" இலிருந்து மீள்விக்கப்பட்டது