பக்கம்:நவக்கிரகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நவக்கிரகங்கள்

அதிதேவதையாகிய நீர், இங்கே நீர்மகளாக நீர்ப்பரப்பின்மேல் தோற்று கிருள். அவனது இடப்புறத்தே பிரத்தியதி தேவதையாகிய கெளரி, குழற் கோலம் திகழ வீற்றிருக்கிருள். பின்னே மேருமலே, கிழல்போலத் தோன்றுகிறது. சந்திரன் நிசாகரன் ஆதலின் இரவின் கருமையையே கிலேக்களமாக வைத்து, ஒவியர் இதைத் திட்டியிருக்கிருர். முகி ற்கணம் சிதறிய வானத்தையும் அந்த கிலேக்களத்திலே காண் கிருேம்.

எல்லாம் எழில் உருவாக அமைய, இடையே அமுத எழில் பொங்க, அருளொழுகு கண்ணும் சாக்தம் மலரும் முகமும் உடைய வெண்மதித் தேவன் வீற்றிருப்பது இனிய காட்சி.

தண்ணென் நிலவால் சராசரத்துக் கின்புதவிக் கண்ணெகிழும் பூங்குவளை கட்டவிழ்த்து-விண்ணவர்கள் ஆரமுதம் உண்ண அருளோ டொளிபரப்பிச் சீருறுவான் திங்கட்புத் தேள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/29&oldid=584243" இலிருந்து மீள்விக்கப்பட்டது