பக்கம்:நவக்கிரகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்காரகன்

மங்களன், குஜன், செவ்வாய் முதலிய பெயர்களே உடைய அங்கார கன், வைக்கிரக மண்டலத்தில் மூன்ருவதாக வருகிருன். சூரியனுக்குத் தெற்கே இவனே ஆவாகனம் பண்ணிப் பூஜிப்பது மரபு. திருமேனியும் உடை, மாலே முதலியனவும் கல்ல சிவப்பாக இருத்தலின் செவ்வாய் என்ற பெயர் தமிழில் வழங்குகிறது; செம்மீன் என்றும் சொல்வதுண்டு.

"முந்நீர் நாப்பண் திமிற்சுடர் போலச்

செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்' என்பது புறநானூறு." -

பூமிதேவியில்ை வளர்க்கப் பெற்றவளுதலின் அங்காரகனே கில மகளின் சேயாகக் கூறுவர். குஜன் என்ற பெயர் அதனல் அமைந்ததே. த.ரா சுதன், பெளமன் என்பனவும் அந்தக் காரணத்தால் ஏற்பட்ட புெயர்களே. -

உமாதேவி, இறைவனே நீங்கியிருந்த காலத்தில் சிவ பெருமான் யோகத்தில் இருங் தார். அப்போது அவருடைய நெற்றிக் கண்ணில் வேர்வை உண்டாகிப் பூமியில் விழுந்தது. அதிலிருந்து மங்களன் குழந்தை வடிவாகத் தோற்றினன். அக் குழந்தையை நிலமகள் வளர்த் தாள். அவன் தவம் செய்ய லாளுன், அத்தவத்தின் மிகுதி யினல் அவன் உடம்பில் யோகாக்கினி கொழுந்து விட்டு : எரிந்தது. அத்தவத்தின் பயன கக் கிரக பதவியை அடைக் தனன்.

மற்ருெரு வரலாறு வரு மாறு: பாரத்துவாச முனிவர் பால் தோற்றிய கருவிலிருந்து மங்களன் குழந்தை உருவாகி வந்தான். அவனேப் பூமிதேவி வளர்த்து வந்தாள். உரிய பருவத்தில் பாரத்துவாசமுனிவ

அங்காரகன் - பழைய ஓவியம் ... . . .

1. புறநா. 60: 1-2. கடலிடையே படகின் விளக்குத் தோன்றுவதுபோலச்

செவ்வாய் ஒளிவிடும், வானத்தில் என்பது இதன் பொருள், !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/30&oldid=1006453" இலிருந்து மீள்விக்கப்பட்டது