பக்கம்:நவக்கிரகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராகு 57

பானுபிதிதன், க்ரகராஜன், காலரூபன், நீகண்ட ஹ்ருதயாச்ரயன், ஸைம்ஹிகேயன், கோரரூபன், மஹாபலன், க்ரகdடாகரன், தம்ஸ்ட்ரீ, ரக்தகேத்ரன், மஹோதரன் என்ற பெயர்கள் இவனுக்கு வழங்கு கின்றன.'

ராகுவின் மண்டலம் சூரியமண்டலத்துக்குக் கீழே இருக்கிறது. இவன் அமாவாசை, பெளர்ணமி காலங்களில் சூரியனையும் சந்திரனேயும் மறைத் துத் திருமால் சக்கராயுதத்தை ஏவப் பின்பு அகலுவான்."

முத்துசாமி தீட்சிதர் இயற்றிய கீர்த்தனத்திலிருந்து ராகுவைப் பற். றிப் பின்வரும் செய்திகள் தெரிய வருகின்றன:

'சூரிய சந்திரர்களுடன் கிரகண காலத்தில் காணற்குரியவன்; விகார மான உடலை உடையவன்; அசுரனுக இருந்து, தேவகை மாறிய உடம் புடையவன்; நோயைப் போக்குபவன்; பாம்பு முதலிய விஷப்பிராணி களால் உண்டாகும் பயத்தை ஒழிப்பவன்; முறத்தை ஆசனமாகக் கொண்டவன், கயான மந்திரத்துக்கு உரியவன்; கருணே பெருகும் கடைக்கண் நோக்குடையவன்; நாற்கரத்தோன்; கத்தி, கேடயம் ஆகிய படையை எந்தியவன்; தோல் முதலிய கரிய உடையை உடையவன்; கோமேதகத்தை அணிந்தவன்; சனிக்கும் சுக்கிரனுக்கும் கண்பன்; ஞான குருவாகிய முருகனுக்கு மகிழ்ச்சியை அளிப்பவன்.'

3.

ராகுவின் ஒவியத்தில் அவனுடைய உருவம் அச்சத்தைத் தருவதாக இருக்கிறது. திருமுகம் மாத்திரம் தேவனேப் போல இருப்பினும் உடல் முழுவதும் செதில்கள் அமைந்து பாம்பு, என் பதைப் புலப்படுத்துகின்றன. சூலமும் கட்கமும் ஏந்திய கைகளும் வரதமுடைய கை ஒன்றும், சும்மா தொங்கப்போட்ட கை ஒன்றும் உடைய கோலத்தில் கரிய உடையோடு தோலேயும் அணிந்து வீற்றிருக் கிருன். மேலே உள்ள சிங்கக் கொடி, அவனுடைய வாகனமும் அது என்பதை உய்த்துணர வைக்கிறது. கொடியும் குடையும் கருகிறம் உடையன. முறத்தைப் போன்ற ஆசனத்தில் ராகு வீற்றிருக்கிருன். -

வலப்பக்கத்தில் அதிதேவதையாகிய பசுவையும் இடப்புறம்

பிரத்தியதி தேவதையாகிய சர்ப்பத்தையும் காண்கிருேம். மேருவை

இடமாகச் சுற்றுபவன் ராகு பின்னல் உள்ள மல் இதைக் குறிப்பிக்

கின்றது. பின்னே நிலைக்களம் பயங்கரமாக அமைந்திருக்கிறது.

... r கரவின் அமுதுண்டான் ; கார்கிறத்தான் ; மேனி

அரவம் முகம்அமரன் ஆளுன் ; - மருவுமுறம் ... . . ஆகும் இருக்கையான்; அஞ்சுதகு தோற்றத்தான் ராகுகிழற் கோளென் றிசை.

1. நவக்கிரக ஸ்தோத்திர ஸங்கிரஹம். 2. பாகவதம், 5.5:3.

நவ-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/64&oldid=584278" இலிருந்து மீள்விக்கப்பட்டது