பக்கம்:நவநீதப் பாட்டியல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X பற்றிச் செல்கின்றது என உணரலாம். இணைமணி மாலையின் இலக் கணத்தைக் காண்க. சிற்சில இடங்களில் வச்சணந்திமாலைக் கருத் துக்களோடு மாறுபட்டும் செல்லுகின்றது. உறுப்பு என்னும் செய்யு ளின் இலக்கணம் இதற்குத்தக்க சான்றாகும். புத்துரை வெண்பாப் பாட்டியலைத் தழுவி எழுதப்பட்ட போதிலும், பழையவுரையே (பக் - 116) நூலாசிரியர் கருத்தை வெளிப்படுத்துவது என்று கொள் ளுதல் நேரிதாகும். நவநிதப்பாட்டியல் அகத்தியத்தின் வழிநூல் என் பது குறுமுனி யாதிக் கலைஞர் கண்ட பாட்டியலானவை யெல்லாம் தொகுத்தான்' (102) என்ற செய்யுளால் விளங்கும். சிதம்பரப் பாட்டியலும் அகத்தியத்தின் வழிப்பட்டதே. வெண்பாப்பாட்டியல் அதன் உரையால் இந்திரகாளியத்தின் வழிப்பட்டது என்பது விளங்குகிறது. எனவே பாட்டியல்கள் இந்திரகாளியநெறி, அகத்தி யர் நெறியென இருவேறு வழியினவாய் அமைந்தனவாகலாம்என்று கருத இடமுண்டு. வெண்பாப் பாட்டியல் இந்திரகாளிய நெறிக்கும். நவநீதப்பாட்டியல் அகத்தியர் நெறிக்கும் வழிகாட்டிகளாய் இயற் றப்பட்டன போலும். மேற்குறித்த உறுப்புப்பற்றிய வேறுபாடு முதனூற் கொள்கைகளின் வேறுபாட்டினால் அமைந்தது என்று ஊகிக்கலாம். அகத்தியரது புதுக் கொள்கைகளில் ஒன்று ஆனந்தக் குற்றம். இக்குற்றம் பற்றிய சூத்திரங்கள் யாப்பருங்கல விருத்தி யில் உள்ளன. நவநீதப்பாட்டியல் ஆசிரியர் இக்குற்றங்களை உடன் பட்டு ஆனந்தக்குற்றம் என்ற பெயரினையே தமது நூலில் எடுத் தாளுகின்றார். வெண்பாப்பாட்டியலின் ஆசிரியர் இக்குற்றங்களை உடன்பட்டார் என்பதற்குச் சான்று இல்லை. அகத்தியர் பாட்டியல் களின் வழித்தாய் நூல் செய்தவர்கள் அவரைத் திருமுதுபொதியிற் றெய்வ முனிவன்' என்பர் (பக். 115). இந்திரகாளிய நெறியின் வந்தோரும் * பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் இவ்வகத்தியனார் பொதியின் முனிவர் அல்லர் என்றும் பிற்காலத்தார் ஒருவர் என்றும் கொள்வர். இருவேறு நெறிகளுக்கும் வழிகாட்டிகளாய் அமைந்த நூல்களாதலின் இவை சற்றுமுன் பின்பாகத் தோன்றியிருக்கலாம். நவநீதப்பாட்டியல் நல்லவை, நிறையவை, தீயவை, குறையவை என நான்கு வகை அவைகளுக்கு இலக்கணம் கூறுகின்றது. இவ்

  • பேராசிரியர், தொல்- உவம - 37 உரை ; மரபு-108 உரை.

நச்சினார்க்கினியர், மலைபடுகடாம்-145 உரை.