பக்கம்:நவநீதப் பாட்டியல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவநீதப் பாட்டியல் 33. குழமகன்: கலிவெண்பால் மாதர்கள்தம் கையிற்கண்ட இள மைத் தன்மையுடைய குழமகனைப் புகழ்ந்து கூறுவது. 34. குறத்திப் பாட்டு: தலைவன் பவனிவர, மகளிர் காமுறுதல், மோகினி ரைவு, உலாப்போந்த தலைவனைக் கண்டு மயங்கல், திங்கள்; தென்றல் முதலிய உவாலம்பனம்,பாங்கி உற்றது என்னெனலினனல், தலைவி பாங்கி யோடு உற்றது கூறல், பாங்கி தலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவி பாங்கியைத் தூது வேண்டல்,தலைவி பாங்கியோடு தலைவன் அடையாளம் கூறல், குறத்தி வரவு, தலைவி குறத்தியை மலைவளம் முதலிய வினவல், குறத்தி மலைவளம் நாட்டுவளம் முதலிய கூறல், தலைவன் தலவளம் கிளைவளம் முதலிய கூறல், குறி சொல்லி வந்தமை கூறல், தலைவி குறிவினவல், குறத்தி தெய்வம் பராவல், குறி தேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசில் உதவி விடுத்தல், குறவன் வரவு,புள் வரவு கூறல், கண்ணி குத்தல், புட் படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனொடு குறத்தி அடையாளம் கூறல், குறவன் குறத்தியைக் கண்ணுறல், குறவன் அணி முத லிய கண்டு ஐயுற்று வினவலும் ஆண்டாண்டுக் குறத்தி விடை கூறலுமாகக் கூறல், பெரும்பான்மையும் இவ்வகை உறுப்புக்களால், அகவல், வெண்பா, தரவுக்கொச்சகம், கலித்துறை, கழிநெடில் விருத்தம், கலிவிருத்தம் இச்செய் யுள் இடைக்கிடைக் கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழாற் பாடுவது. 35. கேசாதி பாதம்: கலி வெண்பாவால் முடிமுதல் அடியளவும் கூறுவது. 36. கைக்கிளை : ஒருதலைக் காமத்தினை ஐந்து விருத்தத்தால் கூறு அன்றி, வெண்பா முப்பத்திரண்டு செய்யுளால் கூறுவதும் ஆம். 37. கையறுநிலை: கணவனொடு மனைவி கழிந்துழி அவர்கட்பட்ட அழிவுப்பொருளெல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்து படாது ஒழிந்த ஆயத்தாரும், பரிசில் பெறும் விறலியரும் தனிப்படருழந்த செயலறுநிலையைக் FLS. 80 வது. 38. சதகம்: அகப்பொருள் ஒன்றன்மேலாதல், புறப்பொருள் ஒன் றன்மேலாதல் கற்பித்து நூறு செய்யுள் கூறுவது. 39. சாதகம்: திதிநிலை, வாரநிலை, நாண்மீன் நிலை, யோகநிலை, கரண நிலை,ஓரை நிலை, கிரகநிலை இவ்வேழ்வகை உறுப்புக்கள் நிலையையும் சோதிட