பக்கம்:நவநீதப் பாட்டியல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 81 பிரபந்த அகராதியும் இலக்கணமும் நூலால் நன்குணர்ந்து அவற்றை அமைந்து அவற்றால் தலைவற்கு உறுவன கூறு வது. மற்றும் யுகாதி யாண்டு முதலியனவும் கொள்க.

  • 40. சின்னப்பூ : நேரிசை வெண்பாவால் அரசனது சின்னமாகிய

தசாங்கத்தினைச் சிறப்பித்து விரித்து நூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது என்றும் எண்படக் கூறுவது. $1. செருக்களவஞ்சி: போர்க்களத்திலே அட்ட மனிதருடலையும் யானை குதிரை உடலையும் நாயும் பேயும் பிசாசமும் கழுகும் பருந்தும் காக மும் தின்று களித்து ஆரவாரமாய் இருக்கப் பூதமும் பேயம் பாடியாட இங்ங னம் இருந்த சிறப்புப் பாடுவது. இதையே பறந்தலைச் சிறப்புப் பாட்டும் என்ப. 42. செவியறிவுறூஉ : பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடன் என அவையடக்கியற் பொருளுற வெண்பா முதலும் ஆசிரிய இறுதியமாகக் கூறுவது. 43. தசாங்கத்தயல்: அரசன் தசாங்கத்தினை ஆசிரிய விருத்தம் பத்தினால் பாடுவது. 44. தசாங்கப்பத்து : நேரிசை வெண்பாவால் அரசன் படைத்த தசாங்கத்தினைப் பத்துச் செய்யுளால் கூறுவது. 45. தண்டகமாலை: வெண்பாவால் முந்நூறு செய்யுள் கூறுவது. இது வெண்புணர்ச்சிமாலை எனவும் படும். 46. தாண்டகம் : இருபத்தேழு எழுத்து முதலாக உயர்ந்த எழுத் தடியினவாய் எழுத்தும் குருவும் இலகுவும் ஒத்துவந்தன அளவியற்றாண்டகம் எனவும், எழுத்தொவ்வாதும் எழுத்தலகொவ்வாதும் வந்தன அளவழித்தாண் டகம் எனவும் படும். நாரகைமாலை : அருந்ததிக் கற்பின் மகளிர்க்குள்ள இயற்கைக் குணங்களை வகுப்பரற் கூஅவது. தூசிப்படையின் அணியைப் புகழ்ந்த வகுப்பு என்பாரும் உளர். 43. தானைமாலை: அகவலோசையிற் பிறழாது ஆசிரியப்பாவான் முன்னர் எடுத்துச் செல்லும் கொடிப்படையைக் கூறுவது. 49. தும்பைமாலை: மாற்றாரோடு தும்பைப் பூமாலைசூடிப் பொருது வதைக் கூறுவது. 50. துயிலெடைநிலை : தன்வலியாற் பாசறைக்கண் ஒரு மனக் கவற்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் துயிலெடுப்புதலாகப் பாடுவது. 6