பக்கம்:நவநீதப் பாட்டியல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவநீதப் பாட்டியல் 51. தூது: ஆண்பாலும், பெண்பாலும் அவரவர் காதல் பாணன் முதலிய உயர்திணையோடும், கிள்ளை முதலிய அஃறிணையோடும் சொல்லித் தூது போய்வா எனக் கலிவெண்பாவால் கூறுவது. 52. தொகைநிலைச்செய்யுள் : நெடிலடிச் செய்யுளால் தொகுத்தது நெடுந்தொகையும், குறளடிச் செய்யனால் தொகுத்தது குறுந்தொகையும், கலிப்பாவால் தொகுத்தது கலித்தொகையும் போல்வன. 53. நயனப்பத்து கண்ணினைப் பத்துச் செய்யுளால் கூறுவது. 54. நவமணிமாலை: வெண்பா முதலாக வேறுபட்ட பாவும் பாவி னமுமாக ஒன்பது செய்யுள் அந்தாதித்துப் பாடுவது. 82 நாமமாலை: அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பா வால் ஆண்மகனைப் புகழ்ந்து பாடுவது. 56. நாற்பது : காலமும், இடமும், பொருளும் ஆகிய இவற்றுள் ஒன்றனை நாற்பது வெண்பாவால் கூறுவது. 57. நான்மணிமாலை: வெண்பாவும், கலித்துறையம், விருத்தமும், அகவலும் அந்தாதித்தொடையாக நாற்பது பாடுவது. 35. நூற்றந்தாதி : நூறு வெண்பாலினாலேனும், நூறு கலித்துறையி னாலேனும் அந்தாதித் தொடையால் கூறுவது. 59. நொச்சிமாலை : புறத்தூன்றிய மாற்றார்க்கு ஓடலின்றி நொச்சிப் பூமாலைசூடித் தன்மதில் காக்கும் கிறம் கூறுவது. 60. பதிகம்: ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யளால் கூறு வது. i1. பதிற்றந்தாதி: பத்துவெண்பா, பத்துக்கலித்துறை, பொருட் டன்மை தோன்ற அந்தாதித்துப் பாடுவது. 62. பயோதரப்பத்து: முலையினைப் பத்துச் செய்யளால் கூறுவது. 68. பரணி: போர்முகத்து ஆயிரம் களிற்றியானையைக் கொன்ற வீரனைத் தலைமகனாகக் கொண்டு கடவுள் வாழ்த்தும், கடைதிறப்பும், பாலை நிலமும், காளிகோயிலும், பேய்களோடு காளியும் காளியோடு பேய்களும் சொல்லத் தான் சொல்லக் கருதிய தலைவன் சீர்த்திலிளங்கலும், அவன் வழி யாகப் புறப்பொருள் தோன்ற வெம்போர் வழங்கவிரும்பலும் என்றிவையெல் லாம் இருசீரடி முச்சீரடி ஒழித்து ஒழிந்தமற்றடியாக ஈரடிப் பஃறாழிசையாற் பாடுவது.