பக்கம்:நவநீதப் பாட்டியல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவநீதப் பாட்டியல் விளையாட்டும் நீர்விளையாட்டும் உண்டாட்டும் மகப்பேறும் புலவியும் கலவி யும் என்று இவற்றைப் புகழ்தலும், மந்திரமும் தூதும் செலவும் போரும் வென்றியும் என்றிவற்றைத் தொடர்ந்து கூறலும் ஆகிய இவை முறையே தொடர்புறச் சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பகுதியை உடைத் தாய் வீரம் முதலிய சுவையும் அவற்றை விளக்கும் கருத்தும் விளங்கக் கற்றோ ரால் இயற்றப்படுவதாம். நாற்பயன் ஒழிந்து எனைய உறுப்புக்களுள் சில குறைந்து இயலினும் குற்றமின்று. 75. பெருமகிழ்ச்சிமாலை: தலைவியின் அழகு, குணம், ஆக்கம், சிறப் பினைக் கூறுவது. 76. பெருமங்கலம் : நாடோறுந் தான் மேற்கொள்கின்ற சிறை செய்தல் முதலிய செற்றங்களைக் கைவிட்டு, சிறைவிடுதல் முதலிய சிறந்த தொழில்கள் பிறத்தற்குக் காரணமான நாளிடத்து நிகழும் வெள்ளணியைக் 84. கூறுவது. 77. போர்க்கெழுவஞ்சி: மாற்றார்மேல் போர் குறித்துப் போகின்ற வயவேந்தர் வஞ்சிப்பூமாலை சூடிப் புறப்படும் படையெழுச்சிச் சிறப்பை ஆசிரி யப் பாவால் கூறுவது. 78. மங்கலவள்ளை : உயர்குலத்துதித்த மடவரலை வெண்பா ஒன்ப தாலும் வகுப்பு ஒன்பதாலும் பாடுவது. 79. மணிமாலை: எப்பொருள் மேலும் வெண்பா இருபதும் கலித் துறை நாற்பதும் விரவிவருவது. 80. முதுகாஞ்சி: இளமை கழிந்து அறிவு மிக்கோர் இளமை கழி யாத அறிவில் மாக்கட்குக் கூறுவதாம். 81. மும்மணிக்கோவை: ஆசிரியப்பாவும், வெண்பாவும், நேரசை யும் நிரையசையும்கொண்டு எழுத்தெண்ணிப் பாடும் கலித்துறையும், முறையே தொகை முப்பதுபெற அடுக்கிய அந்தாதித் தொடையால் பாடுவது. 82. மும்மணிமாலை: வெண்பாவும் கலித்துறையும் அகவலும் அந் தாதித்தொடையான் முப்பது பாடுவது. 83. மெய்க்கீர்த்திமாலை: சொற்சீரடி என்னும் கட்டுரைச் செய்யு ளால் குலமுறையிற் செய்த கீர்த்தியைக் கூறுவது. 84. வசந்தமாலை: தென்றலை வருணித்துப் பாடுவது. 85. வரலாற்றுவஞ்சி: குலமுறை பிறப்பு முதலிய மேம்பாட்டின் பல சிறப்பையும் கீர்த்தியையும் வஞ்சிப்பாவால் கூறுவது.