பக்கம்:நவநீதப் பாட்டியல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்த அகராதியும் இலக்கணமும் 86.வருக்கக்கோவை: அகரம் முதலாகிய எழுத்து வருக்கம் மொழிக்கு முதலாம் எழுத்து முறையே காரிகைத்துறைப் பாட்டாகப் பாடுவது. 85 87. வருக்கமாலை: மொழிக்கு முதலாம் வருக்க எழுத்தினுக்கு ஒவ் வோர் செய்யுள் கூறுவது. 88. வளமடல்: அறம் பொருள் இன்பம் ஆகிய அம் முக் கூறு பாட்டின் பயனை எள்ளி, மங்கையர் திறத்துறும் காமவின்பத்தினையே பயன் எனக்கொண்டு, பாட்டுடைத்தலைமகன் இயற்பெயர்க்குத் தக்கதை எதுகை யாக நாட்டியுரைத்து, அவ்வெதுகை படத் தனிச்சொல் இன்றி இன்னிசைக் கலிவெண்பாவால் தலைமகன் இரந்து குறைபெறாது மடல் ஏறுவதாய் ஈரடி யெதுகைவரப் பாடுவது. 89. வாகைமாலை: மாற்றாரை வென்று புகழ்படைத்து வாகைமாலை சூடுவதை ஆசிரியப்பாவால் கூறுவது. 90. வாதோரணமஞ்சரி: கொலைபுரி மதயானையை வயப்ப அடக்கினவர்கட்கும், எதிர்பொருகளிற்றை வெட்டி அடக்கினவர்கட்கும், பற்றிப் பிடித்துச் சேர்த்தவர் கட்கும், வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப்பாவால் தொடுத்துப் பாடுவது. 91. வாயுறை வாழ்த்து: வேம்பும் கடுவும் போல்வனவாகிய வெஞ் சொற்கள் முன்னர்த் தாங்கக்கூடாவாயினும் பின்னர்ப் பெரிதும் பயன்தரும் என மெய்ப்பொருளுற வெண்பா முதலும் ஆசிரியம் இறுதியுமாகக் கூறுவது. 92. விருத்தவிலக்கணம்: வில், வாள், வேல், செங்கோல்,யானை, குதிரை, நாடு, ஊர், குடை இவ் வொன்பதினையும் பப்பத்து விருத்தத்தால் ஒன்பது வகையுறப் பாடுவது. 93. விளக்குநிலை: வேலும் வேற்றலையும் விலங்காது ஓங்கியவாறு போலக் கோலோடுவிளக்கும் ஒன்றுபட்டோங்குமாறு ஓங்குவதாகக் கூறுவது. 94. வீரவெட்சிமாலை: சுத்தவீரன் மாற்றார் ஊரிற் சென்று பசு நிரை கோடற்கு வெட்சிப்பூமாலை சூடி அவ்வண்ணம்போய் நிரை கவர்ந்து வரில், அவனுக்கு முன்பு தசாங்கம் வைத்துப் போய்வந்த வெற்றி பாடுவது. 95. வெற்றிக்கரந்தைமஞ்சரி: பகைவர் கொண்ட தம் நிரை மீட் போர் கரந்தைப் பூமாலை சூடிப்போய் மீட்பதைக் கூறுவது. வேனில்மாலை: வேனிலையும் முதுவேனிலையும் சிறப்பித்துப் 96. பாடுவது.