பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


13 லதா ; உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ணிட்டியேடா பாவி! நீ உருப்படுவியா! உன் வாழ்க்கை விளங்குமா? போற வழிக்குப் புண்ணியம் கிடைக்குமா? கொஞ்ச நேரமாச்சும் உன் மனசாட்சி உன்னைக் கொல்லாதா? நீ எப்படி உயிரை வைச்சுகிட்டு உலகத்துல நடமாடுற” இப்படியே போய் கேளும்மா! அலமேலு : என் தம்பியை நான் எப்படி கேட்பேன்? உனக்கு அவன் மாமன் தானே...நீ போய் கேட்குற3 தானே! லதா துரோகி முகத்துல என்னை போய் விழிக்க சொல்றியேம்மா! அலமேலு : அப்ப, அவனே மறந்துடு! லதா அதெப்படி மறக்க முடியும்? என் நெஞ்: ஆருதும்மா! நான் கொடுத்தா என் சாபம் அப்படியே பலிச்சுடும் ஆமா! அலமேலு நல்லா சாபம் கொடு பலிக்கட்டும். லதா சாபம் கொடுக்கத்தான் போறேன்! நான் வாழ வேண்டிய இடத்துல வாழுருளே இன்னுெருத்தி: பேரைப்பாரு மோகினியாம்...மோகினி! (தணிந்த குரலில்) அம்மா! நீயே சொல்லும்மா! என் மாமன் மேல் நான் எப்படியெல்லாம் உயிரையே வச்சிருந்தேன் தெரியுமா? ஆல்மேலு எனக்கு தெரியாதா லதா! லதா எனக்கிருந்த சாதத்தைக் கூட மாமாவுக்கு போட்டுட்டு, எத்தனையோ நாள் பட்டினி கிடந்திருக் கேன். அவருக்கு உத்தியோகம் கிடைக்கறதுக்காக, என் நகைகளே கூட அடகு வச்சி, ஏன் வித்து கூட .ணம் வாங்கிக் குடுத்திருக்கேன்.