பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


43 லட்சுமி நீ எத்தனை தான் மனசாட்சிக்கு விரோத மில்லாம உண்மையா நடந்து கிட்டாலும், அந்த உண்மையே உ ன க் கு உதவி செய்யாதுன்னு: சொன்னு! ராகவன் : உண்மைதாம்மா! Mr. குமார்! என்னை மன்னிச் சுடுப்பா! உதவி செய்ததுக்கு நன்றி சொல்லாம ஏதேதோ பேசிட்டேன்! என் மகமேலேய அபாண்டமா பழி சுமத்திட்டேன். லட்சுமி : அப்பா! இதுவரையிலும் நான் கல்யாணத்தைப் பத்தி உங்கக்கிட்ட பேசலே! இப்ப, நான் கல்யாணம் செய்துகிட்டு தாம்பா ஆகணும்! ராகவன் : தீ என்னம்மா சொல்றே! லட்சுமி : நான் இவரையே கல்யாணம் செய்துக்குறதா முடிவு பண்ணிட்டேப்பா! (தாழ்ந்த குரலில்) குமார் : லட்சுமி அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம்! என்னை யாருன்னு தெரியாமலே இந்த ஒரு முடிவுக்கு வர்ரது நல்லதுல்லே? லட்சுமி : எப்ப எங்க அப்பா உங்களோட என்னை இணைச்சி பேசிட்டாரோ, அப்பவே என் மானம். போயிடுச்சு என் மானத்தைக் காப்பாத்த உயிரையே தருவேன்னு இப்பதானே சொன்னிங்க! குமார் ; நிச்சயமா லட்சுமி! நாளைக்கே எங்க அப்பா அம்மாவை அனுப்பி, முறையா பெண் கேட்க வரச் சொல்றேன்! வர்ரேன் லட்சுமி! வர்ரேன் சார்...