பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன்னுரை ஒன்பது ஓரங்க நாடகங்கள் அடங்கிய இந்த நூலுக்கு "நவரச நாடகங்கள் எனும் தலைப்பினைத் தந்திருக்கிறேன். ஒன்பது நாடகங்களும் ஒவ்வொரு சுவை யுள்ளதாக அமைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு, இல்லை என்ற பதிலைத் தந்து உங்களை ஏமாற்ற விரும்பவில்லை, பல்சுவை பகுதிகளாக ஒவ்வொரு நாடகமும் அமைந்து இருக்கிறது என்று மட்டும் உங்களுக்கு முன் கூட்டியே சொல்லிவிடுகிறேன். படித்து மகிழ விரும்புவோர்க்கு படிக்கசி சுவையாக இருக்க வேண்டும், நடித்து மகிழ விரும்புவோர்க்கு ந டி ப் பி னை வெளிப் படுத்திக் காட்டும் வண்ணம் துணுக்கங்கள் உள்ளனவாக அமைந்திருக்க வேண்டும் என்பதில் அக்கறையுள்ளவன் என்பதால், இந்நூல் என் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள் சென்னை வானெலி நிலைய வர்த்தக ஒலிபரப்பில்