பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 | சாத்த நல்லா இருக்குது, நல்லா இல்லேங்கறது என்னம் பொறுத்த விஷயம். உன்லை நான் கேட்குறதை தர முடியுமா? முடியாதா?...அதை மட்டும்:சொல்லு. ரவி இதோ பாருங்க... என் சொத்து பூராவையும் உங்சி பேருக்கு எழுதி வச்ச பத்திரம்...இதை எடுத்துக்கங்க. என்னை நீங்க முதல்ல பார்த்த மாதிரி... பரம ஏழையாவே போயிடுறேன்...ஆன. என்னே கலாவோட வாழ அனுமதீங்க...அது போதும். சாத்த நான் இப்போ விரும்புறது உன் பணத்தை இல்லே! இந்தப் பொண்ணைத்தான். முடியாதுன்னு சொல்லிடு, நான் போயிடுறேன்... ரவி : என்னை தர்ம சங்கடத்துல கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே...நான் கல்யாணம் செய்துக்கிறதா சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன், அதை எப்படிங்க மீறுவேன். சாந்த அது எனக்கு எப்படி தெரியும்? ரவி : இதோ...ஒவியம் வரைஞ்சு வரைஞ்க உயர்ந்த புகழை கொடுத்த இந்த வலது கையை வெட்டி எடுத்துக்குங்க, என் கலாவை மட்டும் கேட்காதீங்க... சாந்த கொஞ்சம் பொறு ரவி...கலா...நீயே சொல்லம்மா? நான் வயசானவளு இருக்கலாம். வெறுப்பில்லாம ஒரு முடிவை நீதான் சொல்லணும்.பணம் இல்லேன்ன. இந்த உலகத்துல ஒண்ணுமே இல்லை...பணம் இல்லா தவன் பிணம். தெரியுமா? கலா : அன்பு இல்லாத யாருமே பிணத்துக்கு சமம்.அதுவும் எனக்குத் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/62&oldid=777126" இலிருந்து மீள்விக்கப்பட்டது