பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

‘'அப்படிச் சொன்ன காலம் உண்டு. கூட்டத்தைக் கலைக்கப் போலீசு தேவை இல்லை”

‘கருநாடக சங்கீதம்’

‘'நாங்கள் இப்பொழுது பாப்மியூசிக் பாடுகிறோம்.

நீங்கள் இன்னும் கர்நாடக சங்கீதத்தையே கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்”

நீர் தேவனாகப் பேசவில்லையே'’

“நாங்கள் எல்லாம் மாறி விட்டோம்; மனிதனைப் போல வாழ்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்’ “காரணம்”

‘'சுக போதை எங்களைக் கெடுத்து விட்டது உழைப்பில் உள்ள சுகம் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். அதை இழந்து விட்டோம்.

நாங்களும் மனிதர்களைப் போலச் குழந்தைகளைப் பெற விரும்புகிறோம்; இது முதற்படி'’

அது எப்படி?

தேவர்கள் குழந்தைகள் பெற்றதாக எந்தக் கதையாவது கேள்விப்பட்டது உண்டா? ஆடல் பாடல் கூடல் கும்மாளம் சுருக்கமாகச் சொன்னால் குடி கூத்து இது தான் கேள்விப்பட்டியிருப்பீர்கள். நரை திரை வயது மூப்பு இந்த மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?