பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

வழி ஏராளம் உள்ளன. கற்றுத் தர யான் வரவில்லை ; கற்றுக் கொள்ளவே வந்திருக்கிறேன்'’ என்று கூறி முடித்தார்.

இந்தச் சந்திப்புப் புதுமையாக இருந்தது நாரதரின் தேவகானம் கேட்பது போல இருந்தது.

நயா டில்லிக்கு நாரதர் பயணம் தொடர்ந்தது.

தான் எப்படிப் பிரதமரைச் சந்திப்பது என்று யோசனை செய்தார். வெளி நாட்டுத் தூதர் என்றால் மரியாதை கிடைக்கும் என்பதால் தன்னை இந்திரன் அனுப்பி வைத்தாக அறிவித்தார்.

‘இந்திரன் மாறவே இல்லையா?’ என்று கேட்டார்.

‘இந்திராணிதான் ஆட்சி செய்கிறாள். தேவர்கள் பெண்களை மதிக்கத் தொடங்கி விட்டார்கள்’

‘இந்திரன்?’

‘வேலை இல்லை; வேதனைப் படுகிறார் வங்கி வழக் குகளில் சிக்கிக்கொண்டு வெளிவர முடியாமல் இருக்கிறார்’

‘அங்கும் இப்படித்தானா’ என்று கேட்டுவிட்டு அப் புறம்?’ என்றார்.

எந்தப்புரம்’ என்று கேட்டார்.

‘நடன மாதர்கள்?'