பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்த தியாகிகள் ஏற்றுக் கொண்ட மரணத்தை நான் என் மகளுக்காக ஏற்கத் துணிந்துவிட்டேன். அவளையும் மீட்கமுடியாது; என்னையும் அழிக்கமுடியாது; அதனால் எனக்குத் தோன்றிய ஒரே வழி இதுதான்.

‘உங்க கருத்து தவறானது; நிரபராதிகள் தண்டிக் கப்படுவதில்லை. ஒருவரைத் தூக்கிலிடுவதால் மற்றவர் கள் கொலை செய்ய அஞ்சுவார்கள். இது தண்டனை இல்லை தடுப்பு நடவடிக்கை’ என்றார் அரசாங்க வக்கீல்.

‘நீதிபதி : இது பட்டிமண்டபம் இல்லை ; நீதிமன்

றம்.

‘சரி! நீங்கள் கொலை செய்யவில்லை, தரணி என்ற நடிகர் உங்கள் வீட்டுக்கு வந்தது உண்டா ?’

அவரைப் பற்றிப் பேசுவாள்; ஆனால் அவர் இங்கே வரமாட்டார் என்பாள்

‘அவரைப்பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?’

தங்கமான பிள்ளை . தவறு செய்யக் கூடியவர் அல்ல’

‘அப்ப உங்க முடிவான அபிப்பிராயம்தான் என்ன?

‘பேய்தான் அறைஞ்சிருக்கு’ பாவிமகளை அந்த மாதிரிப்படங்களப் பார்க்கதே பார்க்காதேன்னு தலை தலை அடிச்சு சொல்லி இருக்கேன். கேட்கலை’

-

-

-