பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

புது நடிகை

நீங்க இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தீங்க? ‘விளம்பரம் பார்த்து தான் வந்தேன்’ ‘இதற்கு முன்னால் என்ன செஞ்சுட்டிருந்தீங்க’

‘எம் ஏ. பட்டதாரி. எப்ப்ளாய்மெண்டு எச்சேஞ்ச் படி ஏறி ஏறி இறங்கி அலுத்து விட்டேன்’

அங்கு வேலை கிடைக்காததால் இங்கு வேலைக்கு வந்தீர்களா?

கண்ணியமான தொழில் என்று இதில் காலடி வைத்தேன் ; நடிகர் தரக்குறைவாக நடந்து கொண்டார்; நடிப்பதற்குப் பதிலாக அவர் என்னைக் கட்டி அணைத் தார். நான் திமிறினேன்; என் ஜாக்கெட்தான் கிழிந்தது; அன்றே நடிப்புக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டேன் .

- -

-

- -

கைரேகை நிபுணர்

புது நடிகை பொன்முடி அணிந்திருந்த ஜாக்கட்டில் படிந்திருந்த கைரேகையும் நடிகை ஊர்மிளாவின் ஜாக் கட்டில் படிந்திருந்த கைரேகையும் ஒன்னுதான். இவர் தரக்குறைவாக முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் சுபாவம் உடையவர் என்று தெரியவருகிறது; அதனால் இவர் முரட்டுத்தனம் Rash and negligent act என்று கரு துவதற்கு இடம் இருக்கிறது.