பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவீன தெனாலிராமன்

(நகைச் சித்திரம்)

அவன் அறிவாளி; ஆனால் புத்திசாலி அல்ல; அவன் போக்கும் விமரிசனமும் தனி; மற்றவர்கள் நினைப் பது போல் செய்வது போல் அல்லாமல் புதுமையாக ஏதாவது செய்துவிடுவான்; பேசிவிடுவான்; அதனால் அவனைத் தெனாலிராமன் என்று அழைத்தார்கள். புரி யாமல் மண்டுவாக. இருக்கும்போது ‘மாங்காய். மடையன்’ என்றும் சொல்வார்கள்.

‘நீ ஒரு மாங்காய் மடையன்’ என்பார் அவன்

தந்தை .

‘அப்படியானால் தேங்காய் மடையன்’ யாருப்பா என்று குழைந்து கேட்டான்.

‘சினிவாசன்’ என்றார். கதாசிரியனுக்குத் தலைகுனிவு ஏற்பட்டது. ‘யார் ‘பா அந்த சீனிவாசன்.

‘அவர் ஒரு சிறந்த நடிகர். உன்னைப்போலத்தான் சிரிப்பு ஊட்டும்படி பேசுவார் என்றார் அவர்

‘ஓ! தேங்காய் சீனிவாசனைச் சொல்கிறீரா? என்று பிரித்தான்.

கதாசிரியருக்குக் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது;

‘4