பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

அவர்கள் பேச்சில் தான் அகப்படவில்லை என்று புரிந்து கொண்டார்.

அப்பா சொல்வதால் கல்லூரிக்குச் சென்று படித்து வந்தான். அவனுக்கு ஒரு நல்ல பழக்கம் ; தான் அழகாக இல்லாவிட்டாலும் பெண்களைப் பார்ப்பது அவனுக்கு ஒரு ஹாப்பியாக இருந்தது. இவள் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று வியப்பான். அழகு அவனுக் குப் பிடிப்பது இல்லை; அழகில்லாத பெண்களைத்தான் அவன் விரும்புவான். அதற்குக் காரணம் அழகல்லாவிட்ட டாலும் அவர்களிடம் குணம் இருக்கும் என்று நம்புவான்.

கல்லூரியில் தமிழாசிரியர் சிலப்பதிகாரம் பாடம் நடத்தினார்.

கண்ணக விரித்த கூந்தலும் பிடித்த சிலம்பும் கொண்டு தலைவிரி கோலமாகப் பாண்டியன் அவைக்கனத் துக்குப் போனாள் என்று சொன்னார்.

அவனால் கண்ணகியை மறக்கமுடியவில்லை. எதிரே ஒரு கல்லூரிப் பெண் வந்து கொண்டிருந்தாள். அவள் கொஞ்சம் அழகாக இருந்தாள்; இதுதான் அவன் முதல் தடவையாக அழகிய பெண்ணைப் பார்த்து ரசித் த்து : விமரிசித்தது.

(அவள் கூந்தல் கண்ணகியைப் போல் விரிந்து கிடந் தது; வாரி முடிக்கவில்லை .)

‘உங்கள் பெயர் கண்ணகியா’ என்று துணிந்து கேட்டான்.

‘Modern Girl’ என்றாள் இதுதான் உங்கள பெயரா’ என்று கேட்டான்