பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ ம டும் ஏன் பண்ணிக்கிட்டே என்று கேட் டான்.

‘உங்க அம்மாவைப் போய்க்கேளு’ என்றார்.

‘அம்மா நீ ஏம்மா அவசரப்பட்டுக் கலியாணம் பண்ணிகிட்டே.. எனக்குப் பண்ணி வச்சிட்டு நீ பண்ணிக் கிறதுதானே’ என்று கேட்டான்.

தப்புதாண்டா என்று சொல்லிச் சமாதானப் படுத்தினாள்.

‘நீ படிச்சு பாஸ் பண்ணு; உடனே நல்ல பெண்ணா பார்த்துக் கலியாணம் பண்ணி வைக்கிறோம்’ என்றார் கள்.

‘பெண்ணை நானே பார்த்து வச்சிருக்கேன். நீங்க கலியாணம் மட்டும் பண்ணி வச்சாப் போதும்’ என்றான்

‘யாருடா அவள்’ ‘நவீன கண்ண கி

‘படிக்காமல் கல்யாணம் பண்ணிவைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

விழுந்து விழுந்து படித்தான். படிப்பே ஏறவில்லை.

‘மற்றவங்க எல்லாம் ஏம்மா படிக்கிறாங்க’ என்று கேட்டான்.

‘பட்டம் வாங்கிப் பணக்காரப் பெண்ணைக் கலி - யாணம் பண்ணிப்பாங்க’ என்றாள்.

‘நன்றாகப் படித்தால் நல்ல உத்தியோகம் கிடைக்குப் ; வரதட்சணை நி ைற ய

கிடைக்கும்’ என்று அவனுக்கு விளக்கம் தரப் பட்டது.

‘மடப்பசங்க’ என்று முணுமுணுத்தான்