பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

‘எதுக்குடா’ அப்படி சொல்றே

‘வரதட்சணை கேக்கறாங்களே அதுக்குத்தான்’ என்றான்.

X

-

X

இவன் சரியாகவே படிக்கவில்லை.

“நீ குட்டிச்சுவராத்தான் போகப்போறே’ என்று சபித்தார் அவனுடைய அப்பா

T.V-யிலே அவன் போட்டோ வந்தது.

‘ஏனுங்க இவன் போட்டோ ‘ என்று வியப்புடன் கேட்டாள் அவனுடைய அம்மா!

‘காணாமல் போய்விட்டான்’ என்று நண்பர்களுக் குச் சொன்னார்கள்.

‘போய் முதலிலே அவனைத் தேடுங்கோ’ என்று அவன் அம்மா நச்சரித்தாள்

‘இந்தக் குட்டிச்சுவரைப் போய்த் தேடறேன்’ என்று போனார்.

அவனைக் கண்டுபிடித்தார். ‘என்னைக் குட்டிச்சுவர் என்று சொல்லிவிட்டு ஏன் என் பின்னாலேயே வந்தீங்க’ என்று கேட்டான் .

‘நான் ஒரு கழுதை’ என்று சலித்துக்கொண்டார்.

‘இனிமேல் அப்படிச் சொல்லாதீங்க அப்பா. நான் குட்டிச்சுவர் என்றால் நீங்க கழுதையாகி விடுவீங்க’ என்று புத்திசாலித்தனமாகப் பேசினான்.

அதிலிருந்து அவனை யோசித்து தான் திட்டுவார். ‘அட முண்டம்’ என்றார். தனக்கு அறிவு இருக்கிறது என்று காட்டுவது போல