பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்குத் தலை இருக்கிறது’ என்றான்.

‘நீ தறுதலை’ என்றார் ; அவன் மறுதலை’ ஒன்றும் சொல்லவில்லை.

  • - *

எதிர் வீட்டில் ஒரே கூட்டமாக இருந்தது. ‘ஏம்பா இவ்வளவு கூட்டம்’ என்று கேட்டான்.

முதல் தேதி ஆயிற்றே. கடன்காரர்கள் வந்திருக் கிறார்கள்’ என்றார்.

அதே வீட்டில் சில நாட்கள் கழித்துக் கூட்டம் சேர்ந்திருந்தது.

‘ஏம்பா இன்று முதல் தேதியா’ என்று கேட்டான்.

‘அவருக்குக் கடைசி தேதி என்று விளக்கம் தந் தார்.

  • - *

இவன் ஒரு கலியாண வீட்டுக்குப் போயிருந்தான்.

இவனுக்கு ரசம் பரிமாறப் பட்டது. ‘கொஞ்சம் கையைப் பிடியுங்க’ என்றாள் இள மங்கை ஒருத்தி.

இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாமல், சட் டென்று அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.

‘அவள் குய்யோ முறையோ’ என்று கத்தினாள். ‘கையைப் பிடிச்சிகிட்டானே’ என்று கத்தினாள்.

(உடனே கூட்டம் கூடியது) ‘ஏன்டா அவள் கையைப் பிடிச்சு இழுத்தே என்று