பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டொளியவர்.

‘உனக்குக் கலியாணம் பண்ணி வச்சிட்டு தான் கண்ணை மூடப் போறேன் என்றார்.

‘அது வரையும் எப்படித் தாத்தா கண்ணைத் திறந்து வச்சிக்க முடியும்’ என்று கேட்டான்.

‘சீ மடையா நான் அதுவரை சாகமாட்டேன் , என்று சொல்ல வந்தேன்’ என்றார்.

‘நான் கலியாணமே பண்ணிக்க மாட்டேன்’ என்றான்.

‘எதுக்கடா’ என்று கேட்டார்.

‘நீ செத்திடுவே அதுக்குத்தான்’ என்று பிரியமாகப் பேசினான்.

தாத்தா! படிப்பு முக்கியமா கலியாணம் முக்கி யமா’ என்று கேட்டான்.

‘படிப்புதான்’ என்றார் தாத்தா . ‘கலியாணம் தான் என்றான் அவன். ‘எப்படிடா’ என்று கேட்டார்.

‘படிப்புகூட இல்லாமல் இருக்க முடியும் யாராவது கலியாணம் இல்லாமல் இருந்திருக்காங்களா’ என்று கேட்டான்.

‘நீ பத்திசாலிடா’ என்றார் அவர்.

-

இவனை அவன் தாயார் பால் வாங்கி வரச் சொன்னார்.

ஆண்பாலான பெண்பாலா’ என்று கேட்டான்.