பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘பலர்பால்’ என்றாள் அந்த அம்மையார்.

‘எங்க ஆசிரியர் இலக்கணம் படித்தவர் ஆதலால் பால் ஐந்து வகைப்படும் என்று சொன்னாரம்மா’ என்றான்.

‘ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து வகைப்படும்’ என்று சொன் னாரம்மா என்றான் அவன்.

‘பசும்பால் வாங்கிவா’ என்றாள். ‘அதிலே தண்ணீர் கலப்பார்களே என்றான். ‘தண்ணீர் பால் தான் என்றாள்.

‘ இலக்கணப்படிப் பேச வேண்டும் அம்மா’ என்று அறிவுரை கூறினான்.

கடைசியிலே அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத் தார்கள். இவன் பணம், அழகு, படிப்பு எதுவும் பார்க்க வில்லை. கல்யாணத்தைத்தான் பார்த்தான். தன்னை விரும்பக் கூடியவள் இருந்தால் போதும் என்று எதிர் பார்த்தான்.

‘அழகில்லாத ஒரு பெண் தேவை என்று விளம் பரம் தந்தான்.

ஒரு பெண் கூட விண்ணப்பம் போடவில்லை.

‘சுமாரான அழகு இருந்தால் போதும்’ என்று விளம்பரப்படுத்திப் பார்த்தான்.

அதற்கும் யாரும் வரவில்லை .

மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்று விளம் பரப்படுத்தி இருந்ததால் ஐந்நூறுக்கு மேல் கடிதங்கள் வந்து குவிந்தன. மிகவும் மோசமான ஒரு பெண்ணைத் தேர்ந்து எடுத்தான்.