பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2



அந்த நோவு அவளுக்கு வேதனையைத் தந்தது; அதற்குக்காரணம் அவள் அழகும் நடிப்பும் தான். அந்த நினைவு அவளை அப்படியே மெய்மறக்கச் செய்தது. அவளுக்குத் தூக்கம் வராவிட்டால் கொஞ்சம் ஓவராக அமிர்தம் அருந்துவது வழக்கம். அன்று குடிக்கவும் மறந்து விட்டாள். வேறொரு மயக்கத்தில் இருந்தாள்; இந்த மயக்கம் அவளுக்குத் தேவைப்பட்டது.

கேரள நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அழகி அவள்; அவள், உடல் அழகு, லாவகம் நெளிவு , இடை மெலிவு, தொடைவலிவு; நடை அழகு; ஒவ்வொரு அசைவும் அவள் மற்றவர்களை மெய் மறக்கச் செய்வது போன்று இருந்தது. அந்த அசைவே அவள் வெற்றிக்குக் காரணம். இதழ்கள் இனிமையாகப் பேசின அவள் விட்டுக் கொடுக்கும் சுபாவம் உள்ளவள்; அதனால் விரைவில் முன்னுக்கு வந்தவள்.

பணம் வந்ததும் பக்கபலம் கூடியதால் கார் டிரைவர் கெடுபிடி ஆட்கள் சொந்தம் என்று சொல்லிக் கொண்டவர். பாட்டி மாமன் இவர்கள் எல்லாம் படை சூழ ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

மறு நாள் செய்தி பரபரப்பாயிற்று: மூடிய கண் கள் திறக்கவில்லை. பத்திரிகைகள் ‘மர்மக் கொலை’ என்று ஓரம் கட்டியது தற்கொலையா படுகொலையா என்று முடிவு செய்யப்படவில்லை என்று செய்தி வெளி யிட்டது. ரசிகர்கள் துக்கத்திலும் வியப்பிலும் ஆழ்ந்தன. ஒரு கவிஞர்; புதுக் கவிஞர்