பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வானத்து மீன்

(நகைச்சுவைச் சித்திரம்)

காற்றும் மழையும் ஒரு சேர அடித்துக் கொண்டிருந்தது. கும்மிருட்டு; மின்சாரம் அன்று வேலை நிறுத்தம் செய்து விட்டது, காவல் துறையினர் கூட ரோந்து சுற்று வதற்கு அஞ்சினார்கள். அங்கே பேய்கள் உலவுவதாகப் பேசிக்கொண்டிருந்தனர். அதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அந்த இருட்டும் காற்றும் மழையும் நம்ப வைத்தது. அவர்கள் கால்கள் அடியெடுத்து வைக்க முடியாமல் பின்னிக் கொண்டன.

சுற்றிலும் மரம் செடிகள், தோப்பு என்றும் சொல்ல முடியாது தோட்டம் என்றும் சொல்ல முடியாது புதிதாய்க் கட்டிய பங்களா; திரைவானம் அள்ளித்தந்த பணம் அதனால் கட்டப்பட்டது; அவள் புதிய நட்சத்திரம், அவளுக்கு இருக்கிற சிறப்பு நடிப்பு என்பதைவிட கவர்ச்சிதான். டியூட் ஆடிவிட்டு வந்த களைப்பு ; நடிகன் அவளைக் கிள்ளிவிட்டான்; அதை அவளால் வெளியே சொல்ல முடியவில்லை; அதை எதிர்ப்பதா ஏற்றுக்கொள் வதா என்று தெரியவில்லை. ஒரே வலி; வெளியே சொல்ல முடியவில்லை .