பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4



கம்ப்யூட்டர் யுகம் இது எனினும் கந்தபுராணத்தை நாம் மறப்பது இல்லை. தேவலோகம் அடைந்துள்ள மாற்றத்தை நாரதர் கூறுகிறார். பாரத நாட்டில் கலை எப்படி இயங்குகிறது. கடத்தலை வைத்து இராமா யணம் எழுதினார்கள். இன்று அதே சப்ஜக்ட்தான் சினிமாக்கதைகள். இவை காலத்தின் பிரதிபலிப்பு. கடத்தல் வரை வந்தவர்கள் பயங்கரவாதத்தை இன்னும் தொடவில்லை. அப்படித் தொட்ட கதையும் திரை வானில் கண்ட நாரதர் பாரதம் போராடுகிறது; குழப்பத்திலிருந்து விடுபட வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைக் கண்டு கொள்கிறார்.

அவர் ஒண்டிக்கட்டையா பொடி மட்டையா என்பது கேட்கப்படும் வினா ; அறிவுரை வேறு அறவுரை வேறு அறவுரை வேறு என்று தெளிவுபடுத்துகிறார். பூமி யாத்திரை செய்த அவர் கண்டு கொள்வது ஜன நாயகக் கொடுமை; அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை ; இன்றைய வாழ்க்கையின் சிக்கல்கள் இவற்றை அலசிக் காண்கிறார்.

பாரதப்பிரதமரைச் சந்திக்கிறார் நாரதர். அவரிடம் ஜம்பம் சாயவில்லை. காந்தீயம் இன்னும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது. கலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதை அவர் காண்கிறார்.

எழுத்து என்பது பொழுதுபோக்குக்கு உரிய மெளனக் கலை; சிந்தனைக் கதிர்கள் கொண்டது. உள்ளதை உள்ளபடி கூறுவது அல்லாது; அதை வைத்து விளையாடுவதுதான் எழுத்து என்பதற்கு இந்நூல் சான்று பகரும்.

ரா. சீனிவாசன்