பக்கம்:நாகப்பட்டினம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 99

மராத்தியர் காலத்தில் தமிழகம் பெற்றது என்ன? வரலாற்றுப் பேராசிரியர் திரு. கே.கே. பிள்ளை அவர்கள்.

"அது தொடங்கி (மராத்தியர் ஆட்சி தொடங்கி) சரபோசி மன்னர் ஆட்சிக்காலம் வரையில் மராட்டியரால் தமிழகத்தைப் பொறுத்த வரையில் நன்மை ஏதும் விளைந்தகாகத் தெரியவில்லை" (20) என்று குறித்ததைத் தான் விடையாகக் கொள்ள வேண்டியுள்ளது.

கல்வெட்டறிஞர் புலவர் செ. இராசு அவர்கள் இதனை மறுத்து மராத்தியர் செய்த நன்மைகளாகப் பலவற்றைக் குறிப்பிடுகிறார். அவற்றுள் துளசா திருப்பூந்துருத்தியில் மண்மேடிட்ட குடமுருட்டி ஆற்றைத் திருப்பி வெட்டியமைத்த ஒரு பொது நன்மை, மற்றவை வணிகரும் மராத்திய மன்னரும்,அரசியரும் செய்த சமய அறக் கொடைகளும், தம் புகழ் நிறுவச் செய்தவையாகவும் அமைகின்றன. மிகவும் சிறப்பாகப் பார்ப்பனர்களுக்கு அக்கரையகரம் அமைத்தமை தென்படுகிறது. பொது நன்மை என்பது குறைவே.

உ. வேற்று நாட்டவர் ஆட்சி

1. போர்த்துகீசியர் (1500-1658)

வாசுகோடகாமா போர்த்துகீசியரை 1498-இல் இறக்குமதி செய்ததைக் கண்டோம். கள்ளிக்கோட்டையில் கால்வைத்தோர் மேலைக் கடற்கரை ஓரமாகத் தெற்கே இலங்கையை அடைந்து வாணிபம் மேற்கொண்டனர். பையப்பைய இலங்கை மன்னர்க்கு அவா மூட்டியும், நெருக்கடி தந்தும் வாணிபத்துடன் ஆட்சிப்பங்கில் இடம்பெறச் சில உரிமைகளைக் கொண்டு சிறு பகுதியைத் தம் ஆளுகையிலும் வைத்தனர்.

தொடர்ந்து கீழைக்கடற்கரையோர நகரங்களில் வாணிபம் நடத்தி நாகையை அடைந்தனர். அங்கும் வாணிபம் நிலைக்க வகை கோலினர். இல்ங்கையில் கையாண்ட முறையை மேலும் பாங்கோடு கையாண்டு விசயநகர மன்னர் துணையால் அவருக்கு முகவர் போன்று தஞ்சையை, திருச்சியை ஆண்டநாயக்கர்களைக் கைக்குள் வைத்து நாகையில் ஒரு சிற்றாட்சியே நடத்தினர். படையையும் வைத்துக் கொண்டனர். கடற்பயணக் கலங்களை வைத்துக் கொண்டனர். அவர்கள் காலத்துக் கல்லறைத் தடயங்கள் இன்றும் காணப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/117&oldid=584999" இலிருந்து மீள்விக்கப்பட்டது