பக்கம்:நாகப்பட்டினம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நாகபட்டினம்

"BLESSED ARETHOSE WHO DIE IN THE LORD" இத்தொடர் இறைவனின் திருவருள் கூட்டுவிக்கப் பெற்று அவனில் அடங்கியோர் என்னும் பொருள் கொண்டது. இது '3-isočums (Are those)' . . с - என்று குறிப்பது கவனத்திற்குரியது.

அதனைத் தொடர்ந்து கீழே அமைந்துள்ள டச்சு மொழிச் சொற்றொடர்கள் அறிவிக்கும் செய்திகள் இவை.

மேன்மை தங்கிய சர் சோன்சு வான் ஃச்டிலண்டு (HonourableSir. ாeswanSteelan) ஆளுநரும், தமிழ்நாடு கீழைக் கடற்கரை ஆலந்து ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் இயக்குநருமாவார். இவர்தம் வாழ்க்கைத் துணைவியார் அந்தோணியானிலோ (Anthoniamil0). இவ்வம்மையார் 21.9.1677 இல் ஆலந்து நாட்டுப் பல்லகட்டன் ான்னும் ஊரில் பிறந்தவர். 32 ஆண்டுகள் ஒரு திங்கள் 23 நாள்கள் வாழ்ந்து 18.11.1709இல் நாகபட்டினத்தில் இறந்தார். இவரது இறப்பு இவரது நான்காவது குழந்தைப் பேற்றின்போது நேர்ந்தது. பிறந்த ஆண் குழந்தையும் இத்தாய் இறப்பிற்குச் சற்று முன்னர் இறந்தது. இவர் பெற்ற நான்கு ஆண் குழந்தைகளும் நாகையில் இறந்தன. இதன் விவரத்தைக் கல்வெட்டில் உள்ளவாறு இவ்வாறு கட்டமிடலாம்:

நான்கு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை முதலில் இறந்தது. அதை நாகைக் கல்லறைத் தோட்டத்தில் போர்த்துகீசியர் கல்லறைகளுக்கு மேற்கில் அடக்கம் செய்தனர். அடுத்தடுத்து இறந்த இரண்டு குழந்தைகளையும் அதன் அண்மையில் அடக்கம் செய்தனர். தாயையும் நான்காவதாக இறந்த அறைக் குழந்தையையும் அதே இடத்தில் அடக்கம் செய்தனர். - -

கல்வெட்டு சொல்லும் விவரங்களைக் கொண்டு இவ்வாறு தலாம்.

மூன்று குழந்தைகள் அடக்க இடத்தின் மேல் பாறை சூழ்ந்த அறை (நிலத்தின் கீழ் அமைந்த அறை) அமைக்கப்பட்டு அதில் ஊஞ்சல்

1. இக்கல்வெட்டையும் ஆலந்தர் அமைத்த திருச்சபை ஏசு கோயில் முகப்புச் சுவர் கல்வெட்டையும் மொழிபெயர்த்தவர் திரு. செ. சேம்சு (ஓய்வு பெற்ற ஆசிரியர், தென்னிந்தியத் திருச்சபை மேனிலைப் பள்ளி, நாகை)அவர்கள். ~

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/124&oldid=585006" இலிருந்து மீள்விக்கப்பட்டது