பக்கம்:நாகப்பட்டினம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை - 2 G 1

வைக்கப்பெற்றது. அந்தக் கும்பம் வைத்ததை ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகக் கருதி அது வைக்கப்பட்ட நாள் "தை மாதம் 9 ஆம் நாள் கும்பம் வைத்தது" என்று குறிக்கப்பட்டுள்ளது.

20 ஆம் நூற்றாண்டிலும் நாகூர் பக்கிரிசாமி செட்டியார் மகன் கோவிந்தசாமி செட்டியார் நாகூர் தர்காவிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார். வடக்கு மனோராவிற்குத் தங்கக் கலசத்தைக் கூத்தாநல்லூர் மகாதேவ அய்யர் செய்து வழங்கியுள்ளார். இவற்றிற்கும் கல்வெட்டுகள் உள்ளன.

இசுலாமியர் இங்குள்ள இந்துக் கோயில்களுக்குச் செய்த அறங்கள் கிடைக்கவில்லை எனினும் செவிவழிச் செய்தியாகப் பல கேள்விப்படுகிறோம். ஏகோசி காலத்தில் தஞ்சாவூர் கொங்கனேசு வரர் கோயிலுக்குப் பாசிக்கடை மீரா என்பவரும் பிரதாபசிங் காலத்தில் பாசிப்பேட்டை அகமது இராவுத்தர் என்பவரும் முறையே 8.12.1735 இலும் 9.6.1758 இலும் கொடை அளித்து வந்தனர்.

பிற்காலத்தே மேலைநாட்டார் ஆளுகையின்போது கிறித்துவக் கோயில்கள் அமைந்தபோது தமிழர்கள் பொருளுதவி செய்துள் ளனர். இவ்வாறாக மதப்பிணக்கின்றி நாகை மக்கள் வாழ்ந்தமையும், வாழ்ந்து வருகின்றமையும் குறிக்கத்தக்கன. இன்னும் நாகை மாரியம்மன் கோயில் விழா. நாகூர்க் கந்துள்ளி விழா, வேளாங்கன்னித் திருவிழாக்களில் அவ்வம்மத மக்களுடன் ஏனையவரும் பங்கு கொள்வதைக் காண்கிறோம்.

அறச்சான்றோராகத் திகழ்ந்தது போன்று வணிகச் சான்றோராகவும், தொழிற் சான்றோராகவும் கல்விச் சான்றோ ராகவும் இவற்றையெல்லாம்விட மேலாக உழைப்புச் சான்றோராக வும் திகழ்ந்தவர் திகழ்ந்து வருபவர் நாகை மக்கள். தொன்மைக் காலம் முதல் இன்றுவரை கடற்கரை வாழ்க்கையைக் கொண்டுள்ள கடலோடிகள்ாக ஆடவரும் மீன் வாணிபராக மகளிரும் வாழ்ந்து வருவதும் உழைப்பின் சின்னமாக இருப்பதும் குறிக்கத்தக்க ஒன்றாகும்.

உ. நாகைக் கலை மக்கள்

நாகை நகரத்து மகளிர் கலைகளிற் சிறந்தோராக ஆடற் கலையில் வல்லவராக இருந்தனர். இதனை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/219&oldid=585100" இலிருந்து மீள்விக்கப்பட்டது