பக்கம்:நாகப்பட்டினம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 நாகபட்டினம்

"மங்கைமார் ஆடல் ஒவா மன்னு காரோணத்தான்" என்று அப்பரும்

"கலவ மயில் இயலவர்கள் நடமாடும் செல்வக் கடல்நாகை" என்று சுந்தரரும் - -

"பாடலும் நாடக சாலையும் பைந்தொடியார் ஆடலும் சூழ்கின்ற ஆலயம்" என்று கவித்திருமதி காளிமுத்து அம்மையாரும் பாடிய பாடல்கள் குறிக்கின்றன. ஒரு பழம்பாடல் நாகை நகரமாதர் திருமகள் போன்றவர் என்றும்.அவர்தம் கண்கள் காமவேளை நிலைநாட்டும் காவிமலர்க்கு எதிரானவை அல்ல; ஒத்து இமைப்பவை என்றும்,பண்ணை (இசையை) மலர்த்தும் யாழ்புயில் கையினர் என்றும் பாடியுள்ளது.

"தண்மலர் வில்லிதன் பேராமைக்குத் தயையத்த கண்மலர்க் காவிக் கெதிரா னதுமன்று, கைப்பொலிந்த பண்மலர் யாழ்பயில் வரஆர்வு சேர்பதி நாகை, மிக்க தண்மை கயத்துப் பதுமத்த மாதர் தடங் கண்களே" இப்பாடலை வீரசோழிய மேற்கோள் பாடலாகக் காண்கிறோம். இராசராசப் பெருமன்னன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோயிற் பணிகளுக்காக 400 சிலதியர் என்னும் பனிப்பெண்களை அமைத்தான். அன்னார் தளிச்சேரிப் பெண்டிர் எனப்படுவர். அவருள் நாகைப் பெண்டிர் இருவர் இடம்பெற்றனர். அவருள் ஒருத்தி கூத்துக்கலை பயின்றவள். பெருவுடையார் தேவர்க்கு அடித்தொழில் செய்த தேவரடியார் இருவர். முருங்கையில் முசுமுசுக்கை -

கலைத் திறனுடைய மகளிர் பொதுமக்கள் கண்ணிற்படுவர். கற்புப் பண்புடைய மகளிர் இல்லத்தில் அடங்கியிருப்பர். அவருள்ளும் சான்றோர் உளர்.

ஊட்ட உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் இலைக் கீரையைத் தரும் முருங்கை மரத்தின் அடியில் முசுக்கட்டான் என்னும் கம்பளிப்பூச்சி இருக்குமன்றோ? அதுபோன்று நாகை மகளிரிடையே பரத்தையரும் தேவரடியாராக வாழ்ந்தனர்.

வசை பாடுவதில் வள்ளலான காளமேகம் பாடல் இது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/220&oldid=585101" இலிருந்து மீள்விக்கப்பட்டது