பக்கம்:நாகப்பட்டினம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 நாகபட்டினம்

மறுபிறவி உண்டு; - கடவுள் பற்றிய கருத்தே இல்லை; வழிபாடு, தவம் இல்லை; தன் செயலே எல்லாவற்றையும் உண்டாக்கும்" என்னும் விரிந்த கொள்கைகளைக் கொண்டது. இவற்றின் பாங்கில் நாகை மண்ணில் புத்தத் துறவியர் இடம்பெற்று நூல்களை ஆராய்ந்து நூல்களை எழுதினர். இம்மண்ணின் மொழியாகிய தமிழில் எழுதவில்லை பாளியிலும் வடமொழியிலும் சீனத்திலும் எழுதினர். கடவுள், வழிபாடு, தவம் முதலியவற்றைக் கொள்ளாமை யால் தங்கள் வளாகத்தில் கடவுளை வணங்கவில்லை; புத்தரைப் போற்றினர். வழிபாடு செய்யவில்லை; தவம் புரியவில்லை. இவை போன்ற தம் மதத்தைப் பரப்பத் தாம் இடம் பெற்றிருந்த வளாகம் அன்றி அதன் எல்லை தாண்டி ஏதும் புரியவில்லை. அவ்வளாகத்தில் ஒய்விடமாம் விகாரை இருந்தது. விகாரைகள் பொதுவாக வெட்ட வெளியில் அமையும் உயர்ந்த அடுக்கு மாடமாகும். விகாரைக்குப் பக்கத்தில் 'சைத்தியம் அமைந்திருந்தது. சைத்தியம் என்பது தொடக்கக் காலங்களில் இறந்தோரின் எலும்புகளைக் குவித்து, மண் கொண்டு மூடி வணங்கும் இடம். இவ் வடசொல் பாளி மொழியில் தகபா (Dagaba) எனப்பட்டது. இஃதே பின்னர் (கோபுரம்) பகோடா (Bagoda) ஆகியது. இவ்விடத்திலும் புத்தர் சிலையை வைத்துப் போற்றுவர். மலரைக் கொண்டு போற்றி செய்தல், நீராட்டல், ஆடை சாத்தல், அணிகலன் பூட்டல் முதலிய வழிபாடுகளைச் செய்ய மாட்டார். இவற்றுடன் ஆராமம் எனனும் சோலை இருக்கும். இங்கு உலாவுவர். கட்டாயம் இவ்வளாகத்தில் ஒர் அரச மரம் வளர்ப்பர். விகாரத்திலும் சைத்தியத்திலும் அவரவர் தத்தமக்கெனப் புத்தர் சிலைகளைக் கொண்டிருப்பர். ஒய்விடமே பள்ளி எனப்படும். இங்குதான் அமர்ந்து ஆய்வையும் நூல் எழுதும் பணியையும் செய்வர்; படுத்து உறங்குவர். - மும்மணிக் கூடை

இவ்வமைப்புகள் யாவும் நாகைப் புத்த வளாகத்தில் இருந்தன. கூட்டாகவும் தனித்தும்,

"புத்தம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி; தன்மம் சரணம் கச்சாமி”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/234&oldid=585115" இலிருந்து மீள்விக்கப்பட்டது