பக்கம்:நாகப்பட்டினம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 21 7

என்று கூறிக் கொள்வர்: முழங்குவர். புத்த சமயத்தில் இவை மூன்றும் மும்மணிகள் கொண்ட கூடை. அதாவது திரிபிடகம் (பிடகம் - கூடை) எனப்படும். இவ்வோசைகளையே அண்மையிலிருந்த மக்கள் கேட்டிருப்பர். கேட்டவர் சமயச் சார்பானவர் ஆகவில்லை.

இருப்பினும் இவ்வளாக அளவிலேயே புத்தத்துறவிகள் எண்ணிக்கையும் கீழை நாடுகளிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்து வணங்கிப் போகும் புத்த சமயத்தவர் எண்ணிக்கையும் பெருகின. இதனை இங்கு எழுப்பப்பட்ட விகாரைகளையும் அவற்றின் களங்களையும் கொண்டு உணரலாம். கி.மு. 3ஆம் நூற்றாண்டில்,

அசோக மன்னன் எழுப்பிய பதரி திட்ட விகாரை (ஆதிவிகாரை); கி.பி. 5ஆம் நூற்றாண்டில்,

நாகமன்னன் துணையுடன் காசபதேவர் எழுப்பிய நாகானன விகாரை, கி.பி. 8ஆம் நூற்றாண்டில்,

இரண்டாம் நரசிம்மப் பல்லவன் காலத்தில் சீன மன்னன் வேண்டுகோளால் எழுப்பப் பெற்ற புதுவெளிக் கோபுரம் என்னும் சைனக் கோபுரம். இது எழுப்பித்தவன் பெயரால் "மல்லன் கோபுரம்" என்றும் வழங்கப் பெற்றது என்பனவற்றை அறிந்தோம். கி.பி. 11ஆம் நூற்றாண்டில், -

சிரீ விசய மன்னன் (சுமத்திரா) சோழப் பெருமன்னன் இராசராசன், அவன் மகன் இராசேந்திரன் உதவியுடன் எழுப்பிய சூளாமணி விகாரை பற்றி அறிந்தோம்.

இவற்றால் காலப்போக்கில் முன்னது பழுது பட்டபின் பின்னவை எழுப்பப்பட்ட நிலையை அறியலாம். இதனால் தொடர்ந்து புத்த சமயத்தவர் நீண்ட தொடர்பில் நிறைந்திருந் ததையும் உணரலாம்.

இங்கு அமைந்த புத்தப்பிரிவு ஃனேயானம், மகாயானம் என்னவற்றில் முன்னுள்ள பிரிவினமும் பின்னர் மகாயானமும் ஆயிற்று. பின் பெருகிய காலத்தில் ஒர் ஆனந்தரால் மகளிரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/235&oldid=585116" இலிருந்து மீள்விக்கப்பட்டது