பக்கம்:நாகப்பட்டினம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 நாகபட்டினம்

புத்தத்தில் இணைத்துக் கொள்ளப் பட்டனர். ஆனால் எம்மகளிரும் நாகையில் அமைந்ததாகக் குறிப்பில்லை. புத்தத் தமிழ்ப்புலவர்

தமிழகத்தில் புத்த சமயம் சார்ந்த சான்றோரும் புலவரும் இருந்தனர். சங்க காலத்தில் இளம்போதியார் என்றொரு புலவர் வாழ்ந்துள்ளார். புத்தர் அரச மரத்தடியில் அமர்ந்து அறிவுப் (போதம்) பேரொளி பெற்றார். அதனால் அரசமரம் "போதி" எனப்பெற்றது. போதியார் என்பது புத்தர்க்கும் பின்னர் அச்சமயத்தார்க்கும் பெயராயிற்று. தமிழ்ப்புலவர் போதியார் புத்தம் சார்ந்தவர்; துறவியல்லர். அவர் பாடிய ஒரே பாடல் நற்றிணையில் 72ஆம் பாடலாக உள்ளது. அப்பாடல் காதல் தொடர்பான அகத்துறைப் பாடல். எனவே துறவியல்லர்.

மணிமேகலைக் காப்பியம் பாடிய சாத்தனார் புத்த சமயச் சான்றோர். துறவியல்லர்; தமிழாச்ான். சாத்து என்றால் வாணிபத் தொழில். 'சாத்தன் என்பது தமிழ்ச்சொல். அதன் பெண்பால் "சாத்தி. இது புத்த சமயப் பெயரன்று. இலக்கிய வழக்கில்லாத போதிராசர், தருமராசர் என்னும் சொற்கள் புத்தச் சார்புடையவை.

எவ்வாறாயினும் நாகை மண்ணில் தமிழ்ப்பணி செய்த புத்தச் சமயத்தார் இலர். புத்த வளாகம் -

நாகை விகாரை, கோபுரங்கள் பற்றிய விவரங்கள் முன்னே ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. புத்த சமயத் தொடர்பைப் பொறுத்த வரை வெளிநாட்டாராகிய யாவா, சுமத்திரா, மலேயா, பர்மா, சீனா நாட்டவரே பெருந்தொடர்பில் இருந்தனர். நாகை மண்ணில் மைந்தர்பால் - மக்கள்பால் மனம் பற்றப் படவில்லை.

மேலே குறிப்பிடப்பட்ட வெளிநாட்டார் வணிகம் கருதி இங்கு வந்தனர். தம் சமயச் சார்பில் இவ்வளாகத்தை ஒரு புத்தத் திருவிட மாகக் கொண்டனர். சைத்தியத்தில் வணங்கியும், விகாரையில் அறிவுரை பெற்றும் சென்றனர். நாகையில் புத்தர் சிலைகள்

மற்றொன்றை இங்கு குறிக்க வேண்டும். அது நாகையில் கிடைத்த சிலைகளைப் பற்றியது. பொதுவாக, புத்தர் சிலைகளைக் கல், மரம், வெண்கலம், வெள்ளி,பொன் முதலியவற்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/236&oldid=585117" இலிருந்து மீள்விக்கப்பட்டது