பக்கம்:நாகப்பட்டினம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 - நாகபட்டினம்

'இப்புதுவெளிக் கோபுரம் 5 அடுக்கு மாடங்களைக் கொண்டது. ஏறத்தாழ 68 அடி உயரமுள்ளது. 41 சதுர அடி பரப்புடையது. செங்குத்தான அமைப்பு. அடித்தளத்தின் கூடம் 12" X 11" பரப் புடையது. செங்கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்டது. கூரையின் சுற்றுப் பக்கங்களில் அமைந்த பிதுக்கம் சிற்ப வேலைப்பாடுடையது. இதில் இருந்து ஒரு புத்தர் சிலையும் கிடைத்தது.

இதன் 5ஆவது மாடம் மிகச் சிதைந்து இடிபாடு அடைந்ததால், இடிந்து விழுந்து ஊறு நேராமல் இருக்க வேண்டி, முன்னர் இருந்த மாவட்ட ஆட்சியாளர், அதனை இடித்து விட்டார். -

பின்னர் 4ஆவது மாடமும் சிதைவுற்றிருந்தது. இக்கோபுர இடத்தின் பின்பக்கத்தில் ஏசு சபையோராக அப்போது அங்கிருந்த பிரெஞ்சுக் குருமார் ஒரு தொழுகை அறை (Chapple) அமைத்திருந் தனர். அதற்கு இஃது இடையூறு என்று கருதி 4ஆவது மாடத்தை இடித்து விட்டனர்.

எஞ்சியிருந்த 3 மாடம் 50 அடி உயரம் உடையது. இதனைச் சுற்றி மண் பாதுகாப்பு அமைக்க காப்டன் ஒக்சு திட்டமிட்டு உருவா 400 செலவாகும் என்று அதற்கு இசைவு வேண்டி 19.4.1859 இல் அறிக்கை அனுப்பினார். இது மாநிலத் தலைமைப் பொறியாளரால் 12.5.1859 இல் பரிந்துரை செய்யப்பெற்று அரசு (மிக விரைவாகவே) இசைவளித்து 4.6.1859 இல் ஆணை அனுப்பியது. ஆனால் செயல்படவில்லை.

என்ன காரணம்? அங்கிருந்த ஏசு சபையார் (JesusSociety) அதே ஆண்டில் (1859) இதனை இடித்து விட வேண்டுமென்று அரசுக்கு வேண்டுகோள் அனுப்பினர். இதன் காரணமாக இருக்கலாம். வேலை நிகழவும் இல்லை; ஏசு சபையார்க்கு விடையும் இல்லை.

கிணற்றில் போட்ட கல்லாக எட்டாண்டுகள் கிடந்த ஏசு சபையார் 1867-இல் மீண்டும் அரசுக்கு எழுதினர். இடித்துவிட நான்கு கரணியங்களைக் காட்டினர். (1) சிதைந்துள்ள இந்நிலையால் பாதுகாப்பில்லை. (2) இதன் பின் உள்ள எம் தொழுகை அறைக்கு இதன் மறைப்பால் வெளிச்சமும் இல்லை; கடற்காற்றும் இல்லை; (3) இப்பகுதி நிலத்தை வாங்க வேண்டியுள்ளது; (4) இதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/244&oldid=585125" இலிருந்து மீள்விக்கப்பட்டது