பக்கம்:நாகப்பட்டினம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 227

இடிப்பதால் கிடைக்கும் செங்கல் முதலியன தாம் கட்ட இருக்கும் கல்லூரிக்குப் பயன்படும் (8).

இவ்வாறு வேண்டுகோள் பெறப்பட்ட அதே ஆண்டில் அஃதாவது 28.8.1867 நாளிடப்பெற்று இடித்துக் கொள்வதற்குச் சென்னையி லிருந்த ஆங்கில அரசு இசைவளித்து ஆணை தந்தது.

அவ்வாண்டிலேயே புதுவெளிக் கோபுரம் தரைமட்டத்திற்குக் கீழும் அகழ்ந்தெடுக்கப்பெற்று அழிக்கப்பட்டது. ஆனால், வரலாற்று ஆசிரியர் சர் வால்டர் எல்லியட் என்பார் இக்கோபுரத்தைக் குறித்துள்ளார். இக்குறிப்பு இவர் முன் கண்டதைப் பின் 1878இல் எழுதிய போது குறித்ததாகக் கொள்ள வேண்டும். (9).

ஆனால் இராபர்ட் சீவல் என்பார் இக்கோபுரம் 1882 இல் இடிக்கப்பட்டதாகக் குறித்துள்ளார். இவ்வாண்டு மேலே இடிக்கப் பட்டதாகக் குறிக்கப்பட்ட 1867இற்கு 15 ஆண்டுகள் பிந்தியதாகிறது. இவ்வாண்டுகளின் அறிவிப்பில் மாற்றமிருப்பினும் இடிக்கப் பட்டது என்பதில் மாற்றம் இல்லை.

நாகையில் .. அஃதாவது சோழ மண்ணில் வெளிநாட்டுச் சினமன்னன் தூண்டுதலால் அயல்நாட்டுப் பல்லவ மன்னன் எடுத்த ஒரு கலைக்கோபுரம் வெளிநாட்டுச் சமயத்தார் பயனுக்கும் நலனுக்கும் வெளிநாட்டு ஆங்கிலர் ஆண்ட அரசின் இசைவுடன் தகர்க்கப்பட்டது. 1100 ஆண்டுக் காலச் சின்னம் புத்தத்துடன் அழிந்தது. சமயக் கோபுரமே

அரசுக்கு அறிக்கை தந்த படைத்தலைவர் எஃப். ஒக்சு இக்கோபுரம் பற்றிய தம் கருத்தை அந்த அறிக்கையில் தந்துள்ளார்.

அக்கருத்து, "இது சமயத்தொடர்பு கொண்ட கோபுரம் அன்று. தாம் பர்மாவில் கண்டுள்ள புத்த சமயக் கோயிலின் கட்டட அமைப்பின்படி பார்த்தால் இது புத்த சமயக் கோயில் அன்று. இஃது ஒரு கலங்கரை மாடமே (Land Mark)" srsörušTGb. -

இது பொருந்தாது. சீன மன்னன் இப்படியொரு கோபுரத்தை எழுப்ப இரண்டாவது நரசிம்ம பல்லவனிடம் வேண்டியது சமய நோக்கில்தான். கலங்கரை விளக்கமாக மட்டும் எடுக்க முனைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/245&oldid=585126" இலிருந்து மீள்விக்கப்பட்டது