பக்கம்:நாகப்பட்டினம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 247

கிள்ளிய்ைத்தான் 'சாலிசுகன் என்றாக்கியுள்ளனர். காரோணர் கோயில் கல் தூணில் வடிக்கப்பெற்றுள்ள அரச வடிவம் இவனது என்கின்றனர். உண்மையில் ஓர் அரசன்தான் கட்டியுள்ளான். அவன் வடிவந்தான் தூணில் உள்ளது. ஆனால் அவன் பெயர் அறியக் கூடவில்லை என்பதே உண்மையாகும். அறப்பேழைகள்

காரோணர் கோயிலில் சோழமன்னர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. படியெடுக்கப்பட்டுள்ளவற்றில் முதல் இராசராசனின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டாகிய கி.பி. 994 முதல், மூன்றாம் குலோத் துங்கன் ஆட்சி ஆண்டாகிய கி.பி.1192 வரையிலான 198 ஆண்டுக் காலங்களில் செய்யப்பட்ட அறங்களை அறிகின்றோம். இவை யன்றிச் சிதைந்த இடிபாடுகளால் போனவை, இடம் மாறியவை எத்துணையோ இருக்கலாம்.

முன்னர் ஒலையிலோ, செப்புத் தகட்டிலே எழுதப்பட்ட சாசனம் பின்னர் கல்வெட்டாகும். கல்வெட்டின் தொடக்கம் மங்கலச் சொல்லில் தொடங்கும். தொடர்ந்து மன்னரின் புகழுரையோ வெற்றிச் செய்திகளைத் தரும் மெய்க்கீர்த்தியோ அமையும். கல் வெட்டில் அறக்கட்டளையோ பிறவோ அமைக்கப்பட்ட காலத்து மன்னரின் ஆட்சியாண்டு குறிக்கப்பெறும்.

நாகைக் கல்வெட்டுகள் சில "பிரசஃச்தி" என்னும் மங்கல மொழி யாம் வடசொல்லுடன் தொடங்குகின்றது. பிற யாவும் தமிழில் உள்ளன. மங்கலமொழியைத் தொடர்ந்து "திருமன்னி வளர", "திரு வளர் திரள் புயத்து', "திருமகள் மன்னிய", "திங்களேர் தரு" என்னும் வளங்கூறும் சொற்கள் உள்ளன. (16)

கிடைத்துள்ளவற்றில் காணப்படும் அறங்கள் சோழ மன்னர் களால் வழங்கப்பட்டவை அல்ல. அக்காலத்தில் ஆண்ட மன்னர்களது இத்துணையாம் ஆண்டில் என்னும் ஆட்சி ஆண்டு மரபுப்படி குறிக்கப்பட்டுள்ளவை. நாகை ஊர்ப் பெருமக்கள் என்னும் ஊரார் வணிகர், சில இனத்தவர், அரசுப் பணி கொண்டோர், வெளியூரினர் மேலைக்கடற்கரைக்குடிக் கேணிச் செல்வத்தைச் சேர்ந்த வணிகர்கள், கீழைநாட்டு சிரீவிசய மன்னரின் முகவர்கள் முதலியோர் பல்வகை அறங்களைச் செய்து கல்வெட்டில் பதித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/265&oldid=585146" இலிருந்து மீள்விக்கப்பட்டது