பக்கம்:நாகப்பட்டினம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை - r 281

பொதுமக்களும் பல சமயத்தவரும் இந்திய நாட்டின் பல முனையில் வாழ்பவரும், பல்வகை ஐயம் பெறுவோரும். இடுவோரும் ஆண்டுதோறும் பெருந்திரளாக, நூறாயிரக் கணக்கில் வருகின்றனர். புகை வண்டித்துறை சிறப்பு வண்டிகளையும் அரசுப் பேருந்து நிறுவனம் சிறப்புப் பேருந்துகளையும் விடுகின்றன. - நாகூரைப் பெற்ற நாகைக்கு விழாச் சிறப்பால் மட்டுமன்றி இணிகத்தாலும் வளம் சேர்கிறது. சிறப்பாக வியாழக்கிழமையை நாகூர் வழிபாடாகக் கொண்டு மக்கள் குழுமுகின்றனர். நாகை நகரார்

நாகையில் இசுலாமியம் நாகூர் ஆண்டவரால் தழைத்துப் பூத்துக் குலுங்குகிறது. -

நாகையில் வாழும் இசுலாமியப் பெருமக்கள் தம் தொழு கைக்குச் சில பள்ளி வாயில்களைக் கண்டுள்ளனர். கடமைகள் தவறாது வாழ்கின்றனர். இசுலாமிய ஆன்மீகக் கல்வி நிலையங்கள் உள்ளன. உருதுமொழி, குர் - ஆன் பயிற்றுவிக்கப்படுகின்றன.

ஆண்டவனை அனைவரும் போற்றுகின்றனர். இசுலாமியக் கோட்பாடாகிய "அல்லா ஒருவரே கடவுள்; அவருக்கே வணக்கம்" என்பதை மறவாது நாகூர் ஆண்டவரை வணங்குவது அவர்வழி அல்லாவை வணங்குவதாகவே கொள்கின்றனர்.

"எல்லாப் புகழும் அல்லாகுத்தாலாவுக்கே" என்று குர் - ஆணின் முன்னுரை மொழியை மறவாது நாகூர் ஆண்டவர்க்குச் செய்யும் போற்றியும் அவர்வழி அல்லாவுக்குச் செய்யும் போற்றியாகவே செய்கின்றனர்.

இவற்றிற்கெல்லாம் இறையோட்டமாக நாகை, நாகூர் இசுலாமிய மக்கள் தமிழர்களுடன் ஒன்றியும் உறவாடியும், அரவணைத்துத் தோள் கொடுத்தும், வாழ்வில் பங்கு கொண்டும் இணைந்து வாழ்வது சிறப்புடன் குறிக்கத்தக்கதாகும்.

ஊ. நாகையில் கிறித்துவம்

உலகளாவிய பெருஞ்சமயம் கிறித்துவம். இஃது இல்லாத நாடோ, நகரோ இல்லை என்னும் அளவில் பரவியுள்ள்து. இதன் தோற்றம் 1983இல் நேர்ந்தது. - s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/299&oldid=585180" இலிருந்து மீள்விக்கப்பட்டது