பக்கம்:நாகப்பட்டினம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை 3.11

காலத்தில் நேர்வதைத் தெரிந்து கொள்ளுதல், 6. பெரும் இழப்பு வந்தாலும் அஞ்சாது மேலும் முயலுதல். 7. பொருளை ஈட்டுதல், 8. இல்லத்தார்க்கும் உறவினர்க்கும் பகுத்துக் கொடுத்தல்.

இவற்றை உடையோரை"வாட்டம் இல் சிறப்பினை உடையவர்" என்கிறார்.

இவற்றை நாகை வாழ் வணிகர்களுடன் நினைவில் கொண்டு நாகைப்புராணம் பாடிய பிள்ளை அவர்கள் நாகை வணிகப் பெருமக்கள்,

"புனித இவ்விருநாற் குணங்களும் பொருந்திப் பொற்புற ஒழுகுவார்" (15) என்றார். மேலும் நயமாக வணிகரைச் செவிடர், குருடர், ஊமையர், என்றார். கமுக்கமான செய்திகளைப் பிறர் கூறினால் காது கொடுக்காமல் செவிடராகி விடுவர். பிறர் மனைவியர் அழகைப் பார்க்காத குருடராம்; எவரும் புறங்கூறினால் அதனை எதிர்த்துப் பேசாத ஊமையராம். (16) இவ்வாறு குறையால் நிறை சொன்னார். -

மேலும் பொதுக் கல்வியைக் கற்கும் போதே வணிக் கல்வியும் கற்பாராம். பொருளை ஈட்டும் போதே அறத்தையும் ஈட்டுவாராம். பகுத்துக் கொடுக்கும்போதே சற்று ஊதியத்தோடும் கொடுப் பாராம்.(17) இறுதியில் சொன்னது ஒரு பகடியான உண்மை. முன்னோர் பனம்பழம் அளவு அமைத்த அறக்கட்டளையைத் தினை அளவில் செய்து அந்த அறத்திலும் ஊதியம் சுருட்டும் வாணிபர்களைப் பிள்ளையவர்கள் பார்த்திருப்பார்கள் போலும்,

நல்ல நேர்மையான நாகை வணிகரும் தனிப்பட்டவராகப் பொருளிட்டி நாகைக்கும் பிற ஊர்களுக்கும் அறம் செய்த சிலரை மக்கள் நாகையில் கண்டோம். திருமேனி செட்டியார் போன்றோர் பலர் இடைக்கால அளவில் வணிகர் செட்டிமார் எனப்பெற்றனர். அவ்வகைச் செட்டிமார் நாடெங்கிலும் இருந்தனர். நாகையிலும் பலர் இருந்தனர். வணிகக்குழு

தனி வணிகம் போன்று கூட்டு சேர்ந்து செய்யும் கூட்டு வணிகம் முற்காலத்திலேயே தமிழகத்தில் நிகழ்ந்தது. தனி வாணிபத்தை மேற் கொண்ட போதும் நகர்விட்டு நகர் செல்ல நேரும்போதும் தமிழ் நாட்டிற்குள் நாடு விட்டு நாடு செல்லும்போதும் துணைகருதியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/329&oldid=585210" இலிருந்து மீள்விக்கப்பட்டது