பக்கம்:நாகப்பட்டினம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 - நாகபட்டினம்

வழிப்பறிக் கொள்ளையர் (ஆறலைக் கள்வர்) கருதியும் கூட்டமாக; சென்றனர். இக்குழு "சாத்து' எனப்பெற்றது.

நெல், உப்பு முதலிய பொருள்கள் பல வண்டிகளிலும் கழுதைகள் மேலும் சாரிசாரியாகப் போயின. இதுபோன்ற உப்பு வணிகர் குழு உமண்சாத்து எனப்படும். இத்தகைய 'உமண்சாத்து நாகை உப்பளத்திலிருந்து போனது. விளைந்த உப்பைக் கொடுத்து நெல், பயிறு முதலியவற்றைப் பண்டமாற்றமாகப் பெற்று வந்தது. இச் சாத்து என்பது சிற்றுார்களிலுள்ள வணிகர் கூட்டாக அமைந்து உள்நாட்டில் பரவலாகச் செய்ததுடன் வெளிநாட்டிற்கும் சென்றது. இதுபோன்று வேறு பொருள்களைக் கொண்டு வணிகம் செய்யும் சாத்து இருந்தது. சாத்து' என்னும் பொதுச்சொல் கூட்டான வணிகத்தைக் குறிக்கும். மிளகுப் பொதிகளைக் கழுதைகளின் மீது ஏற்றிச் செல்வர். இதற்கு உல்கு' என்னும் சுங்க வரியும் விதிக்கப்படும். இதனைப் பெரும்பாணாற்றுப்படை,

"கழுதைச் சாத்தொடு வழங்கும் உல்குடைப் பெருவழி" (18) என்று காட்டுகிறது. - -

மக்களின் பல்வகையான பெயர்களைத் தொல்காப்பியம் பட்டியலிடுகிறது. அவற்றில் ஒன்று "குழுவின் பெயர்" (19). இப் பெயருக்கு எடுத்துக்காட்டு தந்த உரையாசிரியர்கள் "வணிகக் கிராமத்தார்" என்று காட்டினர்.

இவ்வகையில் 'மணிக்கிராமத்தார் என்றொரு வணிகக் கிராமத்தார் இருந்தனர். -

நாகையிலிருந்து வணிகக் குழுவினர் கீழை நாடுகளுக்கும் சீனா விற்கும் சென்று வணிகம் செய்தனர். அவ்வாறு சென்ற வணிகர் யாவாவில் ஒரு பகுதியில் குடியமர்ந்து வணிகம் செய்தனர். அப்பகுதி நாகபட்டினம் என்னும் ஊர் ஆயிற்று. இன்றும் அப்பெயரில் உள்ளது.

மன்னர் இராசராசனும் இராசேந்திரனும் கலங்களில் நாகைத் துறைமுகத்திலிருந்து சீனாவிற்கு வணிகத் தூதுவர்களை அனுப்பினர். -

பல திசைக்கும் செல்லும் வணிகக் குழுவொன்று அந்நாளில் இருந் கது. இது திசையாயிரத்து ஐந்நூற்ருவர் குழு என்னும் சிறப்புப் பெயர் பற்றிது, முதற்குலோத்துங்கன் காலத்தில் இக்குழு பல நாடுகளுக்கும் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/330&oldid=585211" இலிருந்து மீள்விக்கப்பட்டது