பக்கம்:நாகப்பட்டினம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை * 321

உப்பை ஆக்கும் இடம் உப்பளம்' எனப்பெறும். அளம்' என்றாலே உப்புத்தன்மை கொண்ட நிலத்தையும் குறிக்கும். நாகையில் முன்னர் உப்பளம் இருந்தது; தொழில் நிகழ்ந்தது. இப்போது இல்லை. முன்னர் இருந்ததன் அடையாளமாகக் கடற் கரையில் உப்புத்திடல் என்னும் பொருளில் Sai Stownd இருக் கிறது. அதுவே தென்னிந்தியத் திருச்சபை மேனிலைப்பள்ளி விளையாட்டுத் திடல். - உணங்கல் கருவாடு -

கடல் மீனையும் தருகிறது: உப்பையும் தருகிறது. இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்தி மீனவப் பெண்கள் ஒரு துணைத் தொழில் செய்கின்றனர். அது கருவாடு எனப்படுகின்றது. மீன் வாடிக் கருத்துப்போனதால் இப்பெயர் பெற்றது. இலக்கியங்கள் இதனை 'மீன் உணங்கல்' என்று குறிக்கும்.

நாகைக் கடற்கரையில் இந்த மீன் உணங்கல் சிறு மலை போல் போராகக் குவித்து வைக்கப்பட்டிருந்ததைப் பிள்ளையவர்கள் பாடி யுள்ளார்கள். இதன் வணிகமும் ஒரு தொழில். ஊருக்குள் கூவியும், வெளியார்க்கு அனுப்பியும் இத்தொழிலை மகளிரும் செய்வர்; ஆடவரும் செய்வர். - 4. படகு - கப்பல் -

அடுத்துக் குறிப்பிடத்தக்க தொழில் நாவாய் படகு கட்டுதல். இஃது திறமையுடன் கலையமைப்பு கொண்ட தொழில். தச்சுக் கலைஞர் இதனைச் செய்பவராயினும் இதற்கென்று தனிப் பயிற்சியுள்ள மரத் தச்சர்களே பயன்படுவர். தச்சர்கள் தொழில் செய்யினும் மீனவர்களின் பட்டறிவு உள்ளவர்களே இதன் வடிவமைப்பிற்கும் உறுதிக்கும் நீர் கசியாமைக்கும் கருத்தைத் தருபவர்கள். கலைத்திறனும் வலிமையான உடல் உழைப்பும் இத்தொழிலுக்கு வேண்டப்படுபவன.

நாகையில் இத்தொழில் காலங்காலமாய் நடந்து வருகின்றது. எப்போதும் ஒரு நாவாயாவது கட்டப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். இக்காலத்தில் ஒரு நாவாய் பல நூறாயிரம் உருவா செலவில் உருவாக்கப்படுகின்றது. நாகைக் கட்டுமானத்தார் பெயர் பெற்றவர்கள். இத்தொழிலாளர் பிறநாடுகளுக்கும் நம் நாட்டின் மேலைக் கடற்கரைப் பகுதிக்கும் சென்று தொழில் செய்தனர். 「ちsT.22。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/339&oldid=585220" இலிருந்து மீள்விக்கப்பட்டது