பக்கம்:நாகப்பட்டினம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 - நாகபட்டினம்

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இத்தொழிலாளர் திறமையில் உருவான நாவாய்கள் சிறந்தவை என்பர்.

இதற்கெனத் தனி மரவகை பயன்படுத்தப்படும். மரப்பாளங்கள் பொருந்தும் இடங்களில் நீர்க்கசிவு, ஏற்படாமல் இருக்கச் சாக்கு அல்லது உரிய பொருள் வைக்கப்பட்டுக் கொண்டே பொருத்தப்படும். கட்டுமானம் முடிந்ததும் வண்ணம் தீட்டி அந்நாவாய்க்கு ஒரு பெயர் சூட்டப்படும்.

இத்தொழிலில் கையாளப்படும் வினைக்கும் நாவாய்ப் பகுதிகளுக்கும் உறுப்புகளுக்கும் தனிக்குறிப்புள்ள சொற்கள் உள்ளன. இவை பெரும்பகுதி தமிழ்ச் சொற்கள். மாந்தர் உறுப்புச் சொற்களாகிய அகடு, நெற்றி முதலிய பல சொற்களாக இக்கலைச் சொற்கள் உள்ளன. - படகில் தமிழ்

மொழி ஞாயிறு பாவாணரையா என் இல்லத்தில் தங்கியிருந்த நாள்களில் படகுத் தொழில் துறைக்கு அழைத்துச் சென்று பல அரிய இத்தொழிற் சொற்களைப் பெற முடிந்தது. மொழிஞாயிறு அவர்கள் சில சொற்களைக் கேட்டு மகிழ்ந்தும் உவந்தும் பாராட்டியும் கருத்தை வழங்கினார்கள். அவர்களே சொற்களைக் குறித்துக்கொண்டு வந்து இல்லத்தில் அமர்ந்து பார்த்து முகம் மலர்ந்தார்கள். எனவே, இத்திறமைத் தொழிலில் தமிழ் வளமும் உள்ளது குறிக்கத்தக்கது.

நாகைக்கு இஃதொரு சிறப்புத் தொழில். - 5. சிற்பக்கலை -

புத்த சமயத்தார் அமைப்பால் நாகை சிற்பக் கலைத்தொழிலில் பங்கு கொண்டது.

புத்தர் சிலைகள் நாகையில் அக்காலத்தில் உருவாயின. சிறிய அளவில் வெண்கலத்தால் வார்ப்பாக அடிப்பாகங்கள் செய்யப் பட்டன. சிறந்த கலைநுணுக்கமுள்ள சிலைகள் இங்கிருந்து எடுக்கப் பெற்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பெற்றுள்ளன. கலை மண்டப அமைப்பில் தூபிகள் புத்தர் உருவையும் பெற்றுள்ளன. கலைத்திற னமைந்த இரண்டு மண்டபத் துண்களின் படங்கள் காட்டப் பெறுகின்றன. ஒரு சிலையில் நிகமா என்று தமிழ் எழுத்தில் உள்ளமை நாகையில் சிற்பங்கள் உருவானதன் அறிகுறியாகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/340&oldid=585221" இலிருந்து மீள்விக்கப்பட்டது