பக்கம்:நாகப்பட்டினம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 8 நாகபட்டினம்

கண்ணனாரும் கரிகாற் பெருவளத்தான், அவன் மகன் நெடுமுடிக்கிள்ளி, அவன் மகன் தொண்டைமான் இளந்திரையன் ஆகிய மூவர் காலத்தும் நெடுநாள் வாழ்ந்தவர். இருவர்மேல் இரண்டு பாட்டுகள் படைத்தவர். பெரும்பாணாற்றுப் படை இளந்திரைய னிடம் காஞ்சியில் பரிசு பெற்று மீளும் ஒரு பாணன், வறிய பாணன் ஒருவனை இளந்திரையன்பால் வழிப்படுத்தும்- ஆற்றுப்படுத்தும் பாட்டு. ஆற்றுப்படுத்தும் தமிழ் இலக்கிய முறையை வாய்ப்பாக்கிக் கொண்டு இளந்திரையன் சிறப்புடன் ஆளும் காஞ்சியை அடைய நெடிய வழியையும் சொல்கிறார். அவ்வமைப்பை நோக்கினால் பரிசு பெற்று மீண்ட பாணன் பாண்டி நாட்டு வட எல்லையில் வைத்து அன்றையச் சோழநாட்டுத் தெற்கெல்லையில் எளிய பாணனுக்கு வழி சொல்லி அனுப்புவதாகக் கொள்ள வேண்டும்.

வழியில் உள்ள பல ஊர்களையும், பலவகை மக்களையும், பல வாழ்க்கைப் பண்பாடுகளையும் விளக்குகிறார். அவ்வழியில் சோழ நாட்டுக் கடற்கரைக்குள் புகவேண்டிய பாணன் சில ஊர்களைக் கடந்து வடக்கு நோக்கிச் செல்ல வேண்டுமெனக் கூறிப் பட்டினத்தை அடைவாய்' என்று குறிக்கிறார். அதற்கு,

"நீர்ப்பெயற் றெல்லை போகி.....

பட்டின மருங்கு அசையின்" (319 - 336) என்று நீர்ப்பெயற்றெல்லை என்னும் ஊரைக்கடந்து அடுத்து வளமிக்க துறைமுக நகரமாகிய பட்டினத்தை அடைவாய்' என்றார்.

ஊ. பட்டினம் என்றால் காவிரிப்பூம்பட்டினமே

பட்டினம் என்ற சொல் துறைமுக நகரங்களைக் குறிக்கு மாயினும் பொதுவாகச் சங்க இலக்கியத்தில் எயிற்பட்டினத்தையும், காவிரிப்பூம்பட்டினத்தையும் குறிக்கும். சிறப்பாகப் பூம்புகாராம் காவிரிப்பூம்பட்டினத்தையே குறிக்கும். :

இப்புலவர் பாடிய காவிரிப்பூம்பட்டினம் பற்றிய பாலைத் திணைப் பாட்டிற்குக்காவிரிப்பூம்பட்டினப்பாலை என்றோ புகார் பட்டினப் பாலை என்றோ பெயரிடாது "பட்டினப்பாலை"என்று பெயரிட்டமை கொண்டு பட்டினம் என்று அடைமொழியின்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/36&oldid=584918" இலிருந்து மீள்விக்கப்பட்டது