பக்கம்:நாகப்பட்டினம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை - 19

குறித்தால் அது காவிரிப்பூம்பட்டினத்தையே குறிக்கும் என்று gx_658TJ6èmlp.

மேலும் பட்டினப்பாலையுள்ளும் "முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்" - என்று பட்டினம் என்றே குறித்தார். இதற்கு விளக்கமளித்த நச்சினார்க்கினியரும் காவிரிப்பூம்பட்டினம் என்று விளக்காமல் "குறைவுபடாத தலைமையினையுடைய பட்டினத்தை எனக்குரித்தாகப் பெறுவே னாயினும்" என்று பட்டினம் என்றே குறித்தார். நூலின் பெயர்க்காரணத்தைக் கூறத்தொடங்கிய போதும், -

"இது பட்டினத்தைச் சிறப்பித்துக்கூறிய பாலைத் திணை யாயினமையின் இதற்குப் பட்டினப் பாலையென்று பெயர் கூறினார்" என்று காவிரிப்பூம்பட்டினம் என்று விளக்காமல் பட்டினம் என்ற சொல்லாலே குறித்தார்.

மேலும் கூர்ந்து நோக்கினால் பத்துப்பாட்டில் காவிரிப்பூம் பட்டினம் என்ற சொல்லே இல்லை. புகார் என்னும் பெயரே "தீம்புகார்" (7) என்று வருகின்றது. சங்கஇலக்கியத்தில் அக நானூற்றில் நக்கீரர், "காவிரிப் படப்பைப் பட்டினம்" (8) என்று பாடியுள்ளார்.

எனவே உறுதியாகச் சொன்னால் காவிரிப்பூம்பட்டினம் பட்டினம் என்றே குறிக்கப்படும் என்று பதியலாம். சிறுபாணாற்றுப் படையில் ஒரு பட்டினம் குறிக்கப்படுகின்றது. அது எயிற்பட்டினம். ஆனால், எயிற்பட்டினம் என்று சிறப்பாய்க் குறிக்கப்ப்டாமல் பட்டினம் என்று பொதுவாகவே குறிக்கப்படுகின்றது. ஆயினும் அதற்குள்ள அடைமொழி எயிற்பட்டினம் என்று கொள்ள வைக்கின்றது.

"மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவிற் பட்டினம்" (9) எனப்படுவதில் "மதிலொடு பெயரிய" (மதில் - எயில்) என்னும் அடைமொழி கொண்டு உரையாசிரியர் நச்சினார்க்கினியர், -

"மதிலொடு பெயரிய- மதிலோடே பெயர் பெற்ற பட்டினம் - என்றது எயிற்பட்டினம் என்றதாம்" (10) என்று விளக்கினார்.

ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் என்னும் சிற்றரசனை நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் பாடிய பாட்டு சிறுபாணாற்றுப்படை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/37&oldid=584919" இலிருந்து மீள்விக்கப்பட்டது