பக்கம்:நாகப்பட்டினம்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 நாகபட்டினம்

தெற்கிலும் மேற்குக் கரையிலும் தொடர்பு அம்ையுமாறு படகுப் போக்கு வரத்து அமைக்கப்பெற வேண்டும்.

வடக்கில் காரைக்கால், புதுவை, கடலூர், மாமல்லபுரம், சென்னை என்றும், தெற்கில் அதிராம்பட்டினம், தூத்துக்குடி, இயன்றால் இசைவுடன் யாழ்ப்பாணம், கொழும்பு என்றும் மேற்கில் கொல்லம் என்றும் பயணிகள் படகுப் பணியும் சரக்குப் படகுத் தோற்றமும் உண்டாக்கப் பெற்றால் பல்வகையிலும் நலம் தரும். மோதல் குறையும்

இப்படகுப் போக்குவரத்து மாநில ஆட்சியாளரால் உள் நாட்டிலும் அமைக்கப்பெற வேண்டும். தொழில் வல்லுநர் திருமிகு நா. மகாலிங்கம் அவர்கள் 24 ஆண்டுளுக்கு முன்னரே (1969இல்), "திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வழியாக நாகபட்டினத்திற்குப் படகுப் போக்குவரத்தை நடத்த புதிய வாய்க்கால் வெட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதன்மூலம் பெரும் அளவிற்கு வணிக வளர்ச்சியோடு வேளாண்மைப் பொருள்களை எளிதாகக் கொண்டு போகவும் வாய்ப்பு ஏற்படும். சுமார் 2 கோடி உருவா செலவில் இந்த வாய்க்காலைத் திருச்சிக் கல்லணையிலிருந்து அமைத்து, இரு புறங்களிலும் செம்மையான நெடுஞ்சாலையை அமைப்பதன் மூலம் போகுவரத்து வாய்ப்பு மிகச் சிறப்பாக அமையும்", (3)

என்று எழுதியுள்ளார். இதனை மாநில ஆட்சியாளர் பார்வைக்கு நாகைப் பெருமக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் வழி வைக்கலாம். திரு நா.ம. தம் கருத்தில் வைத்துள்ள நெடுஞ்சாலை இரு புறங்களிலும் செம்மையான நெடுஞ்சாலையை அமைப்பது என்னும் கருத்தும் செயற்பட்டால் சரக்குந்துகள் மட்டும் பயன்படுத்த இதனை ஒதுக்கலாம். நாட்டில் சரக்குந்தால் நேரும் மோதல்கள் குறையும். அவ்விரு சாலைகளும் ஒருவழிப் போக்காக அமைந்தால் சரக்குந்து மோதல்களும் குறையும். இதனால் வணிகப் பொருள் போக்குவரத்து வாய்ப்புகள் நிறைவை நோக்கி நடைபோடும். கடற்கரை அரண்

மைய அரசு மாநில அரசின் துணையுடன் நாகைக் கடற்கரையை வலுப்படுத்த, சுவர் அரண் அமைக்க வேண்டும். ஏறத்தாழ 3 கி.மீ. நீளத்திற்கு இஃது அமைக்கப்பெற வேண்டும். முன்னர் ஒரளவில் அமைக்கப்பட்டது. இது கரை அரிப்பைப் பாதுகாக்கும் இன்றி யமையாப் பணியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/384&oldid=585270" இலிருந்து மீள்விக்கப்பட்டது