பக்கம்:நாகப்பட்டினம்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று - நாளை - நாகை 36ገ

இதன் தொடர்பில் மாநில அரசு கடற்கரை மீனவர் குப்பம் ஒவ்வொன்றிற்கும் சுற்றுப் பாதுகாப்பு அரண்சுவர் எழுப்பி, அவர்கள் குடிசைகளை உறுதியான வீடுகள் ஆக்க வேண்டும். இவை புயலின் தாக்குதலைத் தாங்குவனவாக அமைய வேண்டும்.

சாலை அலைகள்

நகருக்குள் நெடுஞ்சாலைத் துறைச் சாலைகள் உண்டு. நகராட்சிப் பொறுப்புச் சாலைகள் உள்ளன. பெரும்பாலும் எல்லாம் அலையலையான நிலையில் உள்ளன. அல்லது குண்டு குழிகளாக உள்ளன. இவை செப்பமாக வேண்டும்.

இவ்வாறு நாகை நகர் நாளைய ஆட்சியாளரிடம் பெரும் மாற்றங்களை எதிர்பார்த்துள்ளது. மேலும் எதிர்பார்ப்புகள் வரும் பகுதிகளில் குறிக்கப்படும்.

ஈ. நகரமைப்பு நாகை

இன்றைய நகரமைப்பு

நாகை நகரமைப்பு ஏறத்தாழப் பிற்காலச் சோழர் காலத்தில் கோயில் சுற்றுப்போக்கில் அமைந்த சூழலிலேயே உள்ளது. புறநகர் அமைப்புகள் தவிர நகரில் புத்தமைப்பிற்குரிய மாற்றம் ஏதும் இல்லை. புத்தமைப்பிற்குரிய வாய்ப்புகளும் அருகியே வந்துள்ளன. அவற்றில் தெருக்களில் கழிவுநீர் ஒடுசால்கள் அமைந்தமை ஒரு ഖങ്ങങ്ക யில் நலம் தந்தது. இவ்வமைப்பிலும் விடுபட்ட பகுதிகள் உள்ளன. நாகை நகராட்சி இதில் கவனம் கொள்ளாமல் விட்டுள்ளது. பழைய அடித்தளத்திலேயே புதிய இல்லங்களும் வணிகக் கட்டடங்களும் அமைகின்றன. இன்றைய நகரமைப்பு நிலையில் மிகவும் இடை யூறானது. கடைத்தெருவாகும். குறுகிய பெரிய கடைத்தெருவும், சந்துபொந்தில் சிறு கடைத்தெருவும் அமைந்திருப்பது மாற்ற இயலாத நிலை கொண்டுள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்னமைந்த கோயில் சுற்று நெடுவீதிகளும், குறுவீதிகளும் சிறு தெருக்களும், சந்தும் அவ்வவ்வாறே உள்ளன. சந்துகள் நகராட்சியால் தூய்மை செய்யப் பெற வேண்டிய நிலையில் உள்ளன.

புகைவண்டி நிலையத்தை விட்டு நகர்க்குள் புகுந்தால் சூழ்ந்து கிடக்கும் ஊர்திகள், ஒட்டுக்கடைகள், கூடைக்கடைகள் மக்களை நெருக்குகின்றன; துரத்துகின்றன; வெருட்டுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/385&oldid=585271" இலிருந்து மீள்விக்கப்பட்டது